தமிழ் திரையுலகில், தை பொறந்தாச்சு, வட்டாரம், என்னமா கண்ணு, அசத்தல், உள்ளிட்ட பல படங்களில், கவர்ச்சி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பாபிலோனா. இவரின் சகோதரரை நேற்று இரவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், சென்னை சாலிகிராமத்தில் வசித்தது வரும் இவர், நேற்று இரவு வளசரவாக்கம் பகுதியில் அதீத குடி போதையில் நடு ரோட்டில் பிரச்சனையில் ஈடு பட்டுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் விக்னேஷ் குமாரை தட்டி கேட்க சென்ற போது, அவர்களையும் தாக்க முற்பட்டுள்ளார். இதனால் போலீசார் நடு இரவில் பாபிலோனாவின் சகோதரரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.