Sanam Shetty Deep Fake Video : மாடல் அழகியான சனம் ஷெட்டி கடந்த 2012ம் ஆண்டு வெளியான "அம்புலி" திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக களமிறங்கினர்.

இப்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நாயகியாக வலம் வரும் சனம் செட்டி அவர்கள் துவக்கத்தில் மாடல் அழகியாக தனது பயணத்தை துவங்கினார். கடந்த 2016 ஆம் ஆண்டு "மிஸ் சவுத் இந்தியா" பட்டத்தை வென்றதும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் பிறந்த சனம் செட்டி தமிழ் திரை உலகின் மூலம் தான் கலை உலகில் அறிமுகமானார். 

தொடர்ச்சியாக பல நல்ல திரைப்படங்களில் அவர் நடித்த வருகிறார் இறுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான "மகா" திரைப்படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் இவர் போட்டியாளராக பங்கேற்று 63வது நாளில் எவிக்ட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. 

பிக்பாஸுக்கு பின் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் முட்டி கொண்ட தினேஷ் - விசித்ரா! வெளியேறிய பிரபலம்!

இந்நிலையில் டீப் பேக் வீடியோ குறித்து ஒரு அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு இருக்கிறார் சனம் செட்டி. சில மாதங்களுக்கு முன்பு பிரபல நடிகை ராஸ்மிகா மந்தானாவில் வீடியோ ஒன்று மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது. அதன் பிறகு அந்த Deep Fake வீடியோவை உருவாக்கியவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்பட்டார். 

Scroll to load tweet…

இதேபோல பல நடிகைகளுக்கு இதுபோன்ற வீடியோக்கள் வெளியானதும் அனைவரும் அறிந்ததே. இந்த சூழ்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தற்பொழுது வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் "ஒரு தனி நபர், ட்விட்டர் மூலம் தனது Deep Fake வீடியோவை வெளியாடப்போவதாக மிரட்டுவதாக பதிவிட்டுள்ளார். மேலும் தமிழக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

அட அதான் ஷேவிங் செய்யாமலே இருக்காரா? Clean Shave கெட்டப்பில் இருக்கும் சீமான் தாடி வைத்தது ஏன்? வெளியான உண்மை!