உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் இந்த தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் உலக நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. அதுவரை மக்களை காக்க தனிமைப்படுத்தலே ஒரே வழி என்பதால் இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால் 24 மணி நேரமும் ஷூட்டிங், வெளிநாடு பயணம், மேக்கப் என்று செம்ம பிசியாக சுற்றித்திரிந்த திரைப்பிரபலங்கள் பலரும், கொரோனா லாக் டவுனால் கிடைத்துள்ள இந்த பொன்னான நேரத்தை குடும்பத்துடன் செலவிட்டு வருகின்றனர். மேலும் இதேபோல் மற்றவர்களும் இருக்க வலியுறுத்தி, குடும்பத்துடன் குதூகலமாக இருப்பது, குழந்தைகளுக்கு ஓவியம் வரைய சொல்லிக்கொடுப்பது, உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது போன்ற வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: கொரோனா கோர தாண்டவத்தில்... விஜய், அஜித் ரசிகர்கள் பார்த்த தேவையில்லாத வேலை...!

ஊரடங்கு காரணமாக கேரளாவில் உள்ள தனது வீட்டில் தஞ்சம் புகுந்துள்ள அமலா பால், அங்கு தனது அம்மாவுடன் பொழுதை கழித்து வருகிறார். நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பொழிந்தது போலவே, கேரளாவில் பெய்துள்ளது. முதல் கோடை மழையை கண்டு குதூகலமான அமலா பால் வீட்டை விட்டு வெளியே வந்து ஆட்டம் போட்டுள்ளார். 

இதையும் படிங்க: கணவரை பக்கத்தில் வைத்துக் கொண்டே... ஜெயம் ரவி, அல்லு அர்ஜூனுக்கு சவால் விட்ட ஸ்ரேயா... வைரலாகும் வீடியோ...!

பேண்ட் எதுவும் அணியாமல் டாப் மட்டும் அணிந்திருக்கும் அமலா பால், தங்களது வீட்டிற்கு முன்பிருக்கும் மாமரத்தை சுற்றி, சுற்றி நடனமாடினார். தனது செல்ல பூனையுடன் அமலா பால் கொஞ்சி விளையாடும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது. அமலா பாலின் இந்த வீடியோவை அவரது அம்மா பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக மும்பையில் நடந்த பார்ட்டி ஒன்றில் அமலா பாலின் பேண்ட் போடாமல் அமர்ந்திருந்த போட்டோ ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.