"அட்ஜெஸ்ட்மெண்ட்டால்" பாதிக்கப்பட்ட நடிகை..! புலம்பி தள்ளிய பிஆர்வோ...சென்னையிலிருந்து பெங்களூரு ஓட்டம்..!

எஞ்சினியர் அப்பாவுக்கும் டீச்சர் அம்மாவுக்கும் பிறந்த நடிகை தான் அக்ஷரா. தற்போது கோலிவுட்டில் சில படங்கள் நடித்து வந்தாலும், அவர் எப்படிப்பட்ட  கனவோடு சினிமாதுறைக்கு வந்துள்ளார் தெரியுமா..? என அவரை பற்றி புலம்பும் அளவிற்கு  சென்று விட்டது விவகாரம்.

அக்ஷாரவை ஒரு நிகழ்ச்சியில் பார்த்த டுபாக்கூர் ஒருவர் தன்னை சினிமா கம்பெனி  மேனேஜர் என சொல்லி அவரிடம் பேசி  பழக்கமாகி  உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அக்ஷரா மற்றும் அவருடைய அம்மாவிடமும் உங்கள் மகள் வருங்காலத்தில் மிகப் பெரிய  நடிகையாக வருவார் .. அந்த அளவிற்கு அழகு திறமை உள்ளது என கூறி அவர்களது மனதையே மாற்றி....பின்னர்  நீங்கள் நடிக்க இருக்கும் முதல் படத்தில் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளரை அட்ஜஸ்ட் பண்ணனும் என  கூறி  உள்ளார்...

பல இக்கட்டான சூழ்நிலையை சந்தித்து, "வேடப்பன்" என்ற படத்தில் நடிக்க தொடங்கி , பின்னர் அது பாதியில் நின்று ..அதற்கு அடுத்தபடியாக எஸ் ஏ சந்திரசேகர் படமான வெளுத்துக்கட்டு இல் நடித்து, சாயம் வெளுத்து பின்னர், அதுவும் முடியாமல் பின்னர் நடிகர் சத்யராஜ் மகன் சிபி  நடித்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ஓரளவுக்கு பிரபலம் ஆனார்.

பின்னர் காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்துள்ளார். தற்போதைக்கு இவருடைய மனநிலைமை சென்னையிலிருந்து பெங்களூரே சென்று வேலையை பார்க்கலாம் என்ற நிலைமைக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது .

இந்த அனைத்து விவரங்களும், பிஆர்ஒ ஒருவர், மிகவும் பீல் பண்ணி தனியார்  இதழுக்கு கூறி உள்ளார்.