சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். 

தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

இதையும் படிங்க: "பார்த்து ஜாக்கிரதையா இருங்க".... திரெளபதி படத்தை விமர்சித்த இயக்குநரை மிரட்டிய மோகன் ஜி...!

பக்கத்து வீட்டு பெண் போன்ற  அளவான அழகில் தமிழில் சினிமாவில் கலக்கியவர். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இர்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்டுள்ளார்.

அது என்ன அப்படிப்பட்ட வீடியோ என்று கேட்கிறீங்களா? தல அஜித் பாணியில் ஷூட்டிங் ஸ்பார்ட் பணியார்களுக்கு தோசை சுட்டு கொடுத்திருக்கிறார். இது நல்ல விஷயம் தானே அதுக்கு ஏன் நெட்டிசன்கள் கடுப்பாகுன்னு நீங்க கேட்குறது புரியுது. 


இதையும் படிங்க: படுக்கையை வாரிச் சுருட்டிக் கொண்டு காட்டிற்கு போன இடுப்பழகி ரம்யா பாண்டியன்... வைரலாகும் ஹாட் போட்டோ...! 

ஊட்டி போன்ற குளு, குளு மலைப்பிரதேசத்தில்  எடுக்கப்பட்ட வீடியோவில், அசிஸ்டண்ட் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு குடை பிடித்து நிற்கிறார். இதை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் தோசை ஊத்துறதுக்கு எதுக்கு குடை என பங்கமாக கலாய்த்துள்ளனர். ஏன் இப்படி சமைக்கிற மாதிரி நடிக்கிறீங்க. உண்மையாக சமைக்கிறவங்க இப்படி தான் கூலிங்கிளாஸ், குடை, நல்ல டிரஸ் போட்டு வந்து சமைப்பாங்களா? என தாறுமாறாக கேள்வி எழுப்பியுள்ளனர்.