நாடக காதலை தோலுரிப்பதாக கூறிய கடந்த மாதம் 28ம் தேதி வெளியான திரைப்படம் திரெளபதி. பழைய வண்ணாரப்பேட்டை இயக்குநர் மோகன் ஜி இயக்கியுள்ள இந்த படத்தில் ஷாலினி அஜித்தின் தம்பி ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார், கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியான போதில் இருந்தே எதிர்ப்பும், ஆதரவும் பெருகி வந்தது. ஆனால் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன போது பேனர், பாலாபிஷேகம் என தடபுடலான வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

இதற்கு முன்னதாக திரெளபதி படத்தின் சர்ச்சை உச்சத்தில் இருந்த போது மூடர்கூடம் படத்தின் இயக்குநர் நவீன் குப்பைஅள் குறித்து கருத்து வேறு சொல்லனுமா? என ரசிகரின் கேள்விக்கு பதிலளித்திருந்தார். இதையடுத்து திரெளபதி இயக்குநர் மோகன் ஜியும் அவரது ஆதரவாளர்களும் ட்வீட்டரில் சண்டையை தொடங்கினர். 

இதையும் படிங்க:  படுக்கையை வாரிச் சுருட்டிக் கொண்டு காட்டிற்கு போன இடுப்பழகி ரம்யா பாண்டியன்... வைரலாகும் ஹாட் போட்டோ...!

தற்போது திரெளபதி படம் ரிலீஸ் செய்யப்பட்டு, 5 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் மோகன் ஜி, மூடர்கூடம் இயக்குநர் நவீனை லேசாக சீண்டிபார்த்துள்ளார். அதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ஹாய் பிரதமர்... எப்படி இருங்கீங்க... திரெளபதி படத்திற்கான உங்களது வாழ்த்துகளை பெற காத்திருக்கிறேன். நீங்க இப்பவாவது உங்க தவற புரிஞ்சிக்கிட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன். கிழிஞ்ச பாராசூட்ட வச்சிட்டு உயர பறக்காதீங்க... விபத்து ஏற்படலாம்.. இனியாவது பார்த்து ஜாக்கிரதையாக இருங்க புரோ...! என்று இயக்குநர் நவீனை மிரட்டும் தொனியில் பதிவிட்டுள்ளார்.