Actress Aishwarya Rajesh : குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி, இன்று கோலிவுட்டில் நல்ல பல படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ள நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.

குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு திரை உலகில் அறிமுகமான நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான "நீதானா அவன்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். தொடர்ச்சியாக அவர் பல படங்களில் நடித்து வந்தாலும் கடந்த 2012 ஆம் ஆண்டு பா ரஞ்சித் அவர்களுடைய இயக்கத்தில் வெளியான "அட்டகத்தி" திரைப்படத்தின் மூலம் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

அதன் பிறகு தொடர்ச்சியாக அவர் படங்களில் நடிக்க துவங்கினார். "ரம்மி", "பண்ணையாரும் பத்மினியும்" மற்றும் "கதை திரைக்கதை வசனம் இயக்கம்" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான "காக்கா முட்டை" என்கின்ற திரைப்படம் தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. 

காவலர் தேர்வு.. அனுமதி சீட்டில் நடிகை சன்னி லியோனின் புகைப்படம் - குழம்பி நிற்கும் சைபர் க்ரைம் போலீசார்!

அதன் பிறகு தான் அவர் முன்னணி நாயகியாகவே மாறினார் என்றாலும் அது மிகையல்ல. தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இவ்வாண்டு நான்குக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இறுதியாக "தீரா காதல்" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 

View post on Instagram

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது "சொப்பன சுந்தரி" பட படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை வெளியிட்டு அந்த வீடியோ குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதை பார்த்த அவருடைய ரசிகர்கள் நீங்கள் டோரா போல மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி அவரை கிண்டலடித்து வருகின்றனர். 

ஊதா நிறத்தில் பூத்த கவர்ச்சி பூ.. இளசுகளை இம்சிக்கும் கிளாமரில் சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ!