நடிகர் ஜெயராம் செய்த நெகிழ்ச்சி செயல்.. சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு..
தனது கண்களை தானம் செய்ய ஒப்புதல் அளிக்கும் கண் தான பத்திரத்தில் நடிகர் ஜெயராம் கையெழுத்திட்டார்.

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் ஜெயராம். இவர் தமிழில் கோகுலம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பிரியங்கா, முறைமானம், பெரிய இடத்து மாப்பிள்ளை, தெனாலி, பஞ்ச தந்திரம், துப்பாக்கி, பொன்னியின் செல்வம் 1,2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் மட்டுமின்றி, மிமிக்ரி ஆர்டிஸ்ட், பின்னணி பாடகர், செண்டை மேள கலைஞர் என பன்முக திறமை கொண்ட ஜெயரம் இதுவரிஅ 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் மகன் காளிதாஸ் ஜெயராமும் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
இந்த நிலையில் சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் நேற்று ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் மற்றும் ராஜன் கண் மருத்துமனை சார்பில் கண் தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
நடிகர் ஜெயராம் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தொடர்ந்து பேரணியில் கலந்து கொண்ட அவர் கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவர் கண் தானம் செய்ய ஒப்புதல் அளிக்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டார். நடிகர் ஜெயராமின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.