கொரோனாவால் முடங்கி கிடக்கும் மலையாள திரையுலகிற்கு நிதி திரட்டும் வகையில் படம் ஒன்றை தயாரிக்க மலையாள நடிகர் சங்கம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2008ம் ஆண்டு மலையாளத்தில் டுவென்டி-20 என்ற படம் வெளியானது.  இதில் உச்ச நட்சத்திரங்களான மம்முட்டி, மோகன் லால், சுரேஷ் கோபி, ஜெய்ராம், திலீப் உட்பட மலையாள நடிகர், நடிகைகள் பலரும் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதோடு வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது. தற்போது நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக அதேபோல் அனைத்து நட்சத்திரங்களையும் ஒருங்கிணைத்து ஒரு படத்தை தயாரிக்க மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா முடிவெடுத்துள்ளது. 

இதுகுறித்து அந்த சங்கத்தின் செயலாளரான இடைவேளை பாபு டுவென்டி-20 படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளும் மீண்டும் நடிக்க உள்ளனர். ஆனால் இதில் நடிகை பாவனா மட்டும் இல்லை. ஏனென்றால் அவர் தற்போது நடிகர் சங்கத்தில் உறுப்பினர் கிடையாது. இறந்து போன ஒருவர் எப்படி உயிருடன் வர முடியும்? என கேள்வி எழுப்பினர். அம்மா சங்கத்தின் செயலாளரான இடைவேளை பாபு பாவனா குறித்து இப்படி பேசியது அவருடைய நெருங்கிய தோழியும், சக நடிகையுமான பார்வதிக்கு கடும் கோவத்தை உருவாக்கியது.

 

இதையும் படிங்க: இரவில் யாஷிகாவை தவிக்கவிட்டு தப்பியோடிய பாலாஜி முருகதாஸ்... கிழியும் பிக்பாஸ் பிரபலத்தின் முகமூடி..!

இடைவேளை பாபுவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பார்வதி, நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார் 2018ல் என்னுடைய சில நண்பர்கள் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விலகினர். ஆனால் நான் விலகாமல் தொடர்ந்து நீடித்து வந்தேன். அதற்கு காரணம் உண்டு. அழிந்து கொண்டிருக்கும் நடிகர் சங்கத்தை சீரமைக்க சிலராவது வேண்டுமே எனக் கருதியதால் தான் நான் நடிகர் சங்கத்தில் தொடர்ந்தேன். ஆனால் இப்போது அந்த நம்பிக்கை போய்விட்டதால் விலகுகிறேன் என நீண்ட விளக்கம் கொடுத்தார். 

 

இதையும் படிங்க: தனுஷுக்கு ‘நோ’சொன்ன சாய்பல்லவி... சூப்பர் டூப்பர் ஹிட் படத்தில் தவறவிட்ட வாய்ப்பு...!

இந்நிலையில் நடிகை பாவனா பற்றி நான் தவறாக கூறவில்லை என இடைவேளை பாபு விளக்கம் கொடுத்துள்ளார். அந்த நடிகை இந்த படத்தில் நடிக்கிறாரா? என என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த நடிகை நடித்த கேரக்டர் போன பாகத்திலேயே இறந்துவிட்டதை சுட்டிக்காட்டி தான், இறந்து போன ஒருவர் மீண்டும் எப்படி நடிக்க முடியும் எனக்கூறினேன். மேலும் அந்த நடிகை (பாவனா) நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவும் இல்லை என்பதை சுட்டிக்காட்டினேன். நான் எப்போதும்  எந்த இடத்திலும் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியது கிடையாது என விளக்கமளித்துள்ளார்.