Asianet News TamilAsianet News Tamil

முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட காமெடி நடிகர் யோகி பாபு..!

கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் விதமாக , பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நிலையில், நடிகர் யோகி பாபு இன்று தன்னுடைய முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

actor yogi babu take first dose corona vaccine
Author
Chennai, First Published Jun 14, 2021, 2:50 PM IST

கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் விதமாக , பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நிலையில், நடிகர் யோகி பாபு இன்று தன்னுடைய முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

actor yogi babu take first dose corona vaccine

மேலும் செய்திகள்: ஆடையின்றி நடிக்க கோடி ரூபாய் அதிகம் வாங்கிய பிரபல நடிகை... மொத்தம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
 

கொரோனா தொற்றின் முதல் அலை தமிழகத்தில், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், இரண்டாவது அலை மிக பல உயிர்களை பலி வாங்கியுள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டு வர பேராயுதமாக இருப்பது தடுப்பூசிகள் மட்டுமே என மருத்துவர்கள், சுகாதார துறையினர் அனைவரும் தொடர்ந்து, தடுப்பூசி போட்டுகொண்டு மக்கள் தங்களை கொரோனா தாக்கத்தில் இருந்து காத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா வராது என கூறமுடியாது. அப்படியே வந்தாலும், உயிர் சேதங்கள் தவிர்க்கப்படும்.

actor yogi babu take first dose corona vaccine

மேலும் செய்திகள்: விஷாலின் கடன் புகார் எதிரொலி... நேரில் ஆஜராக இருதரப்புக்கும் போலீசார் சம்மன்!
 

எனவே கொரோனா தடுப்பூசியை இதுவரை நயன்தாரா, விக்னேஷ் சிவன், சூரி, நடிகை கீர்த்தி சுரேஷ், கார்த்தி, குக் வித் கோமாளி கனி, பவித்ரா லட்சுமி என வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டது மட்டும் இன்றி, மற்றவர்களும் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம் என கூறி கூறினார்கள். இந்நிலையில் இன்று நடிகர் யோகி பாபு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போட்டுகொண்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios