இரு தினங்களுக்கு முன்பு ரிலீஸான யோகி பாபுவின் ‘தர்ம பிரபு’ படம் துக்ளக் ஆசிரியர் மறைந்த சோ.ராமசாமியையும், பாஜ.க.வையும் மிக மட்டமாக விமர்சித்துள்ளதாக வலைதளங்களில் பலரும் கொந்தளித்து வருகின்றனர். இதோ சாம்பிளுக்கு ஒரு பதிவு...மிகவும் ஆபாசமான வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன.

...’தர்மபிரபு’ என்ற தலைப்பில் ஒரு கேடுகெட்ட .... முத்துகுமரன் என்பவன் படம் ஒன்று இயக்கியுள்ளான்.,...அதன் கதை என்ன என்றால்..பல ஆண்டுகளுக்குப் பிறகு எமன் ஒய்வு பெற விரும்புகிறார்., அதனால் தனது மகனை (யோகி பாபு )புதிய எமனாக நியமிக்கிறார்.ஆனால் சித்திரகுப்தருக்கு எமன் பதவி - ஆசை வந்துவிடவே ,சோ.ரங்கசாமி ' என்ற நபரை 'நரகத்தில் இருந்து ' வரச்சொல்லி எமனை வீழ்த்தி பதவி பெற ஆலோசனை கேட்பார்.

அதற்கு அவர் பெறும் ஆலோசனை, சித்திரகுப்தரின் சகோதரியை புதிய எமனின் படுக்கை அறைக்கு அனுப்பி இவர்களின் அவரை மயக்கி இவர்களின் பேச்சை கேட்க வைப்பது....!!!!
புதிய எமன் அந்த பெண்ணை அடித்து விரட்டவே, அந்த 'சோ. ரங்கசாமி ' கேரக்டர் கேட்கும் கேள்வி, சரி இவர் இல்லை என்றால் உங்கள் குடும்பத்தில் வேறு பெண்கள் இருக்கிறார்களா என்று....!!! மேலும் அந்த 'சோ ரங்கசாமி ' கேரக்டர் இதற்கு சித்திரகுப்தரிடம் கேட்கும் கைமாறு, தனக்கு சொர்க்கத்தில் ஒரு இடம் வேண்டும் என்பது.!!

இன்னொரு விஷயம் சொல்லவேண்டும் என்றால் 'சோ வின் உடல்மொழியை அச்சுஅசலாக பிரதிபலித்து நடித்திருப்பது பாஸ்கி !'.படம் முழுக்க எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் இந்து மத வெறுப்பு., பிராமண வன்மம், ஈ வெ ரா வுக்கு ஜால்ரா என்று இருந்தாலும் 'சோ ' மீதான தனிப்பட்ட தாக்குதல் உச்சக்கட்டம்.அதே போல இந்த படத்தில் இந்து மத கடவுள்களை படு கேவலமாக சித்தரித்துள்ளனர்.மொட்ட ராஜேந்திரன் என்பவன் சிவனாக நடித்துள்ளான்.அருவருப்பான ஆட்டம் ஆடுகிறான் சிவன் வேடத்தில் .சிவனை கேவலமாக காமெடி செய்கிறான் யோகி பாபு..சிவனை இந்த அளவுக்கு இதுவரை யாரும் அசிங்கபடுத்தியதில்லை...எமதர்மனின் மனைவி சரக்கு சாப்பிடும் காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது..

அதே நேரம் படத்தில் இன்னொரு மதம் காட்டப்படுகிறது ..அதை கண்ணியமாக காட்டியுள்ளனர்..இன்னொரு மத த்தை ஒரு காட்சியில் கூட தொடவில்லை..நேரடியாக பாஜகவை விமர்சித்தும் அமித்ஷா அவர்களை கொலைகாரனாகவும் ஜாதி வெறியனாகவும் காட்டுகின்றனர்..நிகழ்கால அரசியல் நிகழ்வுகளை தரம் தாழ்ந்த முறையில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசுக்கு, சென்சார் போர்டில் யார் இருக்க வேண்டும், இருக்க கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் கண்ட  .... ஏன் நியமிக்கின்றனர்...? என்கிறது அந்தப்பதிவு.
 எழுதியவர்...Pugal Machendran Pugal