சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு.. இன்று மாலை வெளியாகும் அப்டேட் - அந்த கதையா இருக்குமோ?
இம்சை அரசு 24ம் புலிகேசி படத்தை பிரபல நடிகர் யோகி பாபுவை வைத்து சிம்புதேவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

கடந்த 2006ம் ஆண்டு பிரபல இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் வெளியான "இம்சை அரசன் 23ம் புலிகேசி" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் சிம்பு தேவன். அவருடைய 17 ஆண்டுகால திரை பயணத்தில் இதுவரை அவர் ஏழு திரைப்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளார். அதில் 3 படங்கள் Period பிலிம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
2010ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படமும், 2015ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் இவர் இயக்கி வெளியான "புலி" திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் இயக்கிய முதல் திரைப்படமான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து, இம்சை அரசன் 24ம் புலிகேசி திரைப்படம் வடிவேலு நடிப்பில் தொடங்கிய நிலையில் தான் பல சிக்கல்கள் ஏற்பட்டு பல ஆண்டுகாலம் நடிப்புத் துறையின் பக்கம் வராமல் இருந்தார் வடிவேலு.
அதன் பிறகு அந்த திரைப்படத்தை பிரபல நடிகர் யோகி பாபுவை வைத்து சிம்புதேவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதுவும் அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் சென்றது, அதன் பிறகு ஒரு மீனவ கதையை யோகி பாபுவுக்கு, சிம்புதேவன் எழுதியுள்ளதாகவும், அந்த திரைப்படம் விரைவில் துவங்கும் என்றும் சில வருடங்களுக்கு முன்பு கூறப்பட்டிருந்தது ஆனால் அதுவும் படமாக்கப்படவில்லை.
இந்த சூழல் Maali & Manvi என்ற நிறுவனத்தின் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் யோகி பாபு நடிக்கவிருக்கிறார். இந்த திரைப்படத்தை சிம்பு தேவன் இயக்க உள்ள நிலையில் இந்த படம் குறித்த முக்கியமான தகவல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விட்டுப்போன இரு கதைகளில் ஒரு கதையாக இந்த படம் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.