டாஸ்மாக்கில் சரக்கு வாங்கும் இளம்பெண்கள்! சிந்தாம சிதறாம திரும்பிடும்! திமுகவை வச்சு செய்யும் நடிகை கஸ்தூரி.!
தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வரும் நிலையில் இரண்டு பெண்கள் டாஸ்மாக்கில் மது வாங்குவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் சரக்கு வாங்கும் பெண்களின் வீடியோவை பதிவு செய்து மகளிர் உரிமை தொகையை சிந்தாமல் சிதறாமல் திரும்பிவிடும் என்று பதிவு செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வரும் நிலையில் இரண்டு பெண்கள் டாஸ்மாக்கில் மது வாங்குவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- All dravidias கதறிங் on my timeline. உண்மையை சுட்டிக்காட்டிட்டா இந்த திரா-விடியா மூஞ்சிகளுக்கு ஒரே defence தான் - கேள்வி கேட்டவரை அசிங்கமா பேசுவது. இன்னும் தமிழ் நாட்டில் குடிக்காதவர்கள் உள்ளோம் என்பதை யோசிக்க கூட முடியாத, சுய ஒழுக்கமென்றால் என்னவென்றே அறியாத முழு நோயாளிகள் என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில்;- தண்ணியடி, பெண்ணே தண்ணியடி ! எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று தண்ணியடி. அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாம திரும்பிடும் என கூறியுள்ளார்.
நடிகை கஸ்தூரியின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்களும் சர்ச்சைகளும் எழுந்து வந்த நிலையில் இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். அதில், தவறான பாதையில் போகும் சில பெண்களை பற்றியே பதிவு. அவர்களின் பணம் பற்றியே கூறியுள்ளேன். மதுக்கடையில் பெண்கள் நிற்கும் நிலையை கண்டிக்க மாட்டீர்கள். அது யாருக்கென்றாலும். பெண்கள் உரிமை பணம் ஆண்களின் தவறான செலவுகளுக்கு பலியாகக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.