Will Smith : முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்றதால் எமோஷனல் ஆன வில் ஸ்மித்... மேடையில் கண் கலங்கினார்
Will Smith : கிங் ரிச்சர்டு திரைப்படத்தை செரினா வில்லியம்ஸும், வீனஸ் வில்லியம்ஸும் இணைந்து தயாரித்திருந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்றது.
முதல் ஆஸ்கர் விருது
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தற்போது முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்றுள்ளார். கிங் ரிச்சர்டு படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் இரண்டு முறை நாமினேட் செய்யப்பட்டும் அவருக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. தற்போது மூன்றாவது முறை நாமினேட் ஆன வில் ஸ்மித் அந்த விருதை முதன்முறையாக வென்று அசத்தி உள்ளார்.
கிங் ரிச்சர்டு திரைப்படம்
வில் ஸ்மித் நடித்த கிங் ரிச்சர்டு திரைப்படம் ஒரு பயோபிக் ஆகும். இது புகழ்பெற்ற டென்னிஸ் பயிற்சியாளர் ரிச்சர்டு வில்லியம்ஸின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. பிரபல டென்னிஸ் வீராங்கனைகளான செரினா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸின் தந்தை தான் ரிச்சர்டு வில்லியம்ஸ். இவர் தான் செரினா மற்றும் வீனஸ் வில்லியம்ஸிற்கு பயிற்சியாளராக விளங்கினார்.
கிங் ரிச்சர்டு திரைப்படத்தை செரினா வில்லியம்ஸும், வீனஸ் வில்லியம்ஸும் இணைந்து தயாரித்திருந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை உள்பட 6 பிரிவுகளில் நாமினேட் ஆகி இருந்தது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை மட்டும் இப்படம் வென்றது. அந்த விருது வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது.
கண் கலங்கிய வில் ஸ்மித்
முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்றதால் மிகுந்த உற்சாகம் அடைந்த வில் ஸ்மித். மேடையில் உரையாற்றும் போது கண்ணீர் சிந்தினார். மேலும் இந்த விருது கிடைக்க உதவியாக இருந்த கிங் ரிச்சர்டு படத்தின் தயாரிப்பாளர்களான செரினா மற்றும் வீனஸ் வில்லியம்ஸிற்கு மேடையில் நன்றி தெரிவித்தார். மேலும் இந்த விருது விழாவில் தொகுப்பாளரை அறைந்ததற்காக ஆஸ்கர் குழுவினரிடம் மன்னிப்பு கேட்டார் வில் ஸ்மித். முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்ற நடிகர் வில் ஸ்மித்துக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... Oscars 2022 :மனைவியை கிண்டலடித்ததால் ஆத்திரம்! தொகுப்பாளரின் கன்னத்தில் பொளேர் விட்ட வில் ஸ்மித் - viral video