Oscars 2022 :மனைவியை கிண்டலடித்ததால் ஆத்திரம்! தொகுப்பாளரின் கன்னத்தில் பொளேர் விட்ட வில் ஸ்மித் - viral video

Oscars 2022 : நடிகர் வில் ஸ்மித், 94வது அகாடமி விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளரின் முகத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Will Smith punches Chris Rock at Oscars 2022

94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு விருது விழாவை சிறப்பித்தனர். குறிப்பாக இதில் கலந்துகொண்ட பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்று அசத்தினார். மேலும் அவர் கோபமடைந்த சம்பவமும் இதில் அரங்கேறியது.

நடிகர் வில் ஸ்மித், 94வது அகாடமி விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளரின் முகத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகரும், ஆஸ்கர் விருது நிகழ்ச்சியும் தொகுப்பாளருமான கிறிஸ் ராக், நடிகர் வில் ஸ்மித்தின் தனது மனைவியைக் குறிப்பிட்டு கிண்டல் அடித்ததால் கோபமடைந்த நடிகர் வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை கன்னத்தில் பொளேர் என அறைந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வின் போது இந்த சம்பவம் நடந்தது. அதே சமயம், இது முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஸ்கிரிப்டடு ஸ்கிட் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து ஆஸ்கர் அதிகாரிகள் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இச்சம்பவம் ஆஸ்கர் விருதில் கலந்துகொண்ட பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்... Oscars 2022 : 7-வது முறையாக ஆஸ்கர் விருது வென்று கெத்து காட்டும் இந்தியர்... யார் இந்த நமித் மல்கோத்ரா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios