உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் போட்டப்பட, பிரமாண்ட செட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டரில் பாடலாசிரியர்கள் பெயர் பட்டியலில் விவேக் பெயர் இருந்தது.

இதனை வைத்து ஒருசிலர் 'இந்தியன் 2' படத்தில் நடிகர் விவேக் நடிக்கவுள்ளதாக வதந்தியை கிளப்பினர். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார் விவேக்.

இது குறித்து அவர் கூறுகியில் 'இந்த படத்தின் கதைக்கு நான் தேவை என்றால் கண்டிப்பாக இயக்குனர் ஷங்கர் என்னை கூப்பிடுவார். அதுவரை வதந்திகள் வேண்டாம்' என்று கூறியுள்ளார்.

மேலும் 1975ஆம் ஆண்டு 'அபூர்வ ராகங்கள்' வெளியான போது தான் சாந்தோம் பள்ளியில் படித்து கொண்டிருந்ததாகவும், அந்த காலத்தில் இருந்து தான் ஒரு கமல் ரசிகர் என்றும், அவருடன் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் அவருடைய படங்களை பார்க்க தவறுவதில்லை என்றும் நடிகர் விவேக் குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…