'வெண்ணிலா கபடி குழு', 'நீர் பறவை', 'முண்டாசு பட்டி' என தொடர்ந்து, சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களாக மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்த விஷ்ணு விஷால் விரைவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்', 'கதாநாயகன்', 'சிலுக்குவர் பட்டி சிங்கம்' ஆகிய படங்களை தயாரித்து கையை சுட்டுக்கொண்டார். 

இதையடுத்து ஒரு மிகப்பெரிய ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த விஷ்ணு விஷாலுக்கு 'ராட்சசன்' படம் மாஸ் ஓபனிங்காக அமைந்தது. பட்டி, தொட்டி மட்டுமின்றி வெளிநாடுகளில் கூட படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. 

இதையும் படிங்க: காதலர் தினத்தில இந்த கன்றாவிய பார்க்கணுமா?....உடம்புல ஒட்டுத் துணியில்லாமல் போட்டோ போட்ட ஷாலு ஷம்மு...

அந்த உற்சாகத்தில் தற்போது 'எஃப்.ஐ.ஆர்.' படத்தில் நடித்து வரும் விஷ்ணு விஷால், அந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார். கடந்த மாதம் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2018ம் ஆண்டு காதல் மனைவி ரஜினி நட்ராஜை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால், பேட்மிண்ட்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவை காதலிப்பதாக கூறப்பட்டது.

அதை மறுத்த இருவரும் நாங்கள் நல்ல நண்பர்களாக பழகி வருவதாக கூறினர். இருப்பினும் பார்ட்டிகளில் நெருக்கமாக இருப்பதும், ஒன்றாக ஊர் சுற்றுவதும் போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தன. 

இதையும் படிங்க: பார்ட்டியில் ஓவர் ஆட்டம்... உச்சகட்ட போதையில் பேண்ட் போட மறந்த அமலா பால்....!

இந்நிலையில் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட காதலர் தினத்தை, விஷ்ணு விஷாலும், ஜூவாலா  கட்டாவும் கொண்டாடியுள்ளனர். ஜூவாலா கட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

View this post on Instagram

❤️ #happyvalentinesday

A post shared by Jwala Gutta (@jwalagutta1) on Feb 14, 2020 at 8:55am PST

இதையும் படிங்க: சாய்பல்லவி கொடுத்த முத்தத்தால்... திக்குமுக்காடி போன சமந்தா புருஷன்... வைரலாகும் செம்ம ரொமாண்டிக் பாடல்...!

அதில் விஷ்ணு விஷாலின் கன்னத்தில் ஜூவாலா கட்டா அழுத்தி முத்தம் கொடுக்கிறார். மேலும் அந்த போட்டோவுக்கு மை வேலன்டைன் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். அதன் மூலம் இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளது.