தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதிக்கும் இளம் நடிகர்களின் முன்னணி இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால், ஆண்டுக்கு 5 படம் நடித்தோமா? என்று இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தை தேடி, தேடி நடித்து வருகிறார்.  சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வேற லெவலுக்கு வெற்றி பெற்றது. அந்த படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய அனுமதி கேட்டுள்ளதாகவும் கூட தகவல்கள் வெளியாகின. 

 

இதையும் படிங்க: அஜித் மச்சினிச்சி ஷாமிலியா இது?... டாப் ஆங்கிளில் வெளியிட்ட கிளாமர் செல்ஃபி...!

கொரானா காரணமாக திரைப்பட ஷூட்டிங்கில் பங்கேற்காமல் இருக்கும் விஷ்ணு விஷாலின் கைவசம் அடுத்தடுத்து 4 படங்கள் வைத்திருக்கிறார். “காதன்” என்ற படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் அது வெளியாக வாய்ப்பிருக்கிறது. பிரபு சாலமன் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளிவரவிருக்கிறது. மேலும் தமிழில் ‘ஜெகஜால கில்லாடி’, ‘எப்ஐஆர்’ மற்றும் சைக்கோ திரில்லர் படம் ‘மோகன்தாஸ்’ ஆகியவற்றில் விஷ்ணு நடிக்க உள்ளார்.

 

இதையும் படிங்க: “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புது நடிகை... இனி முல்லை - கதிர் ஜோடிக்கு சிக்கல் தான்...!

எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் விஷ்ணு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஐதராபாத்தில் இருக்கும் விஷ்ணு விஷால் தனது காரில் சென்று கொண்டிருந்த போது இரவில் நடுரோட்டில் தான் அந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விஷ்ணு விஷால் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரில் இரண்டு இளைஞர்கள் சீட்டில் அமராமல், கார் டோர் மேல் உட்கார்ந்து பயணித்துள்ளனர். பார்க்கவே அதிர்ச்சியளிக்கும் இந்த வீடியோவை கார் நெம்பர் தெரியும் படியாக தெளிவாக பதிவு செய்துள்ள விஷ்ணு, அதை ஐதராபாத் போலீசாருக்கும் ட்விட்டரில் டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

இதையும்  படிங்க:  ஸ்லிம் லுக்கில் மனதை அள்ளும் ஜோதிகா... மார்டன் உடையில் இதுவரை நீங்கள் பார்த்திடாத போட்டோஸ்...!

அத்துடன், “இவர்கள் நம் நாட்டின் படித்த இளைஞர்கள்.... வழக்கமாக நான் இப்படி செய்ய மாட்டேன். ஆனால் இப்படியொரு பதிவை போட வேண்டியதாகிவிட்டது. ஏனென்றால் அவர்கள் தங்கள் உயிரை மட்டும் ஆபத்தில் வைக்காமல் தேவையில்லாத ஸ்டன்ட் செய்து மற்றவர்களுக்கும் பிரச்சனை ஏற்படுத்துகிறார்கள்” என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.