நடிகர் விஷ்ணு விஷால், பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் ஓவர் ரொமான்ஸில் கிஸ் கொடுத்து இந்த வருட புத்தாண்டை கொண்டாடி, அதன் புகைப்படத்தை வெளியிட்டு, இதுவரை கசிந்த காதல் கிசுகிசுவை உறுதி செய்துள்ளார்.

வெண்ணிலா கபடி குழு, நீர் பறவை, முண்டாசு பட்டி, ராட்சசன் என தொடர்ந்து, சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களாக மட்டுமே தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். நடிகர் என்பதை தாண்டி, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன், சிலுக்குவர் பட்டி சிங்கம், ஆகிய படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர்.

தன்னுடைய காதல் மனைவி ரஜினியை கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த இவர், தொடர்ந்து சில காதல் சர்ச்சைகளில் சிக்கி வந்தார். ராட்சசன் படத்தின் வெற்றிக்கு பின், இவர் நடிகர் அமலாபாலை காதலித்து வருவதாக கூறப்பட்டது. அதனை முற்றிலும் மறுத்தார் விஷுனு விஷால்.

இதை தொடர்ந்து பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார். இதனால், இவர்கள் விஷ்ணு விஷால் அவரை காதலிப்பதாக கிசுகிசு எழுந்த போது, இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என கூறினார்.

இந்நிலையில், அரசால் புரசலாக வந்த காதல் கிசுகிசுவை உறுதி செய்வது போல், இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை ஜுவாலா கட்டாவுடன் கொண்டாடி, முத்த மழைகளை பொழுந்து அதன் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருவரும் காதலை கண்ஃபாம் செய்துள்ளனர்.

 

இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள், விஷ்ணு விஷால் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே... இரண்டாவது திருமணத்திற்கு அஸ்திவாரம் போட்டு விட்டார் என கூறி வருகிறார்கள்.