Actor Vishal : நடிகர் விஷால் இப்பொது வெளிநாட்டில் உள்ள நிலையில், அவர் தான் விஜயகாந்த் அவர்களின் இறப்புக்கு வரமுடியாததை, கண்ணீருடன் தெரிவித்த காணொளி வைரலானது அனைவரும் அறிந்ததே.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நான் விஷால், துவக்கம் முதலிலேயே பல நல்ல திரைப்படங்களை கொடுத்து தற்பொழுது முன்னணி நடிகர்கள் வரிசையில் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்று, இப்பொழுது அதன் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டுக்கு சென்றிருந்த நடிகர் விஷால் அவர்கள், நடிகர் விஜயகாந்த் அவர்களின் மரண செய்தி கேட்டு தன்னால் நேரில் வர முடியாததை எண்ணி கண்ணீர் மல்க ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த சூழ்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற "கலைஞர் 100" விழாவிலும் அவர் கலந்து கொள்ளாதது பல கேள்விகளை தற்போது இணையவாசிகள் மத்தியில் எழுப்பி உள்ளது. 

ஒய்யாரமாக சாய்ந்து சிக்குன்னு சில போஸ் - பச்சை நிற ஆடையில் ரசிகர்களை வர்ணிக்க வைக்கும் ஐஸ்வர்யா மேனன்!

நடிகர் விஷால் மற்றும் அமைச்சரும், முன்னாள் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரிடையே உள்ள நட்பு குறித்து அனைவரும் அறிவர். ஆனால் கடந்த சில நாட்களாக அவர்கள் இருவருக்குள் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக லத்தி படத்தின்போது அவர்கள் இருவர் இடையே உள்ள மனக்கசப்பு அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. 

பல மேடைகளில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் குறித்து விஷால் பேசி வந்ததும் இந்த வெறுப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் பல திரைப்படங்களை விநியோகித்து வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய ரெட் ஜெயண்ட் நிறுவனம், விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டான மார்க் ஆண்டனி திரைப்படத்தை வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த மன கசப்பு காரணமாகத்தான், விஷால் அவர்கள் நேற்று நடந்த "கலைஞர் 100" விழாவில் பங்கேற்கவில்லை என்கின்ற ஒரு தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை விஷாலோ அல்லது உதயநிதி ஸ்டாலின் அவர்களோ இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Archana Mark: செம்ம படிப்ஸ் போலவே பிக்பாஸ் அர்ச்சனா..! 10th மற்றும் 12th மார்க் எவ்வளவு தெரியுமா?