நடிகர் விஷால், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் மீது, காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ள சம்பவம் தமிழ் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

நடிகர் விஷால், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் மீது, காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ள சம்பவம் தமிழ் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ் திரை உலகின் பல வெற்றி படங்களை இயக்கி மிகவும் பிரபலமானவர் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்பி செளத்ரி. இவர் பிரபல நடிகர்களான ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரின் தந்தையும் ஆவார். இவர் மீது, நடிகர் விஷால் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தன்னுடைய புகார் மனுவில் விஷால் கூறியுள்ளதாவது, தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் தான் கடன் பெற்றதாகவும், அந்த கடனை உரிய தேதியில் முறையாக கொடுத்து விட்ட பின்னரும், கடன் கொடுக்கும் போது, தன்னிடம் கையெழுத்து பெற்ற பத்திரத்தை திரும்ப தரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் விஷாலின் இந்த புகார் குறித்து, காவல்துறை ஆணையர் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆர்.பி.செளத்ரியின் மகன்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகிய இருவருமே விஷாலின் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் நிலையில், தற்போது இவர்களது தந்தை மீது விஷால் புகார் அளித்துள்ளது தமிழ் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.