நடிகர் விஷால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை வருமான வரி துறையில் செலுத்தவில்லை என தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு, ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது சென்னை எழும்பூர் நீதி மன்றம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஷால், தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த வருமான வரி தொகையை, வருமான வரித்துறையில் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுகுறித்து, வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அதில் நடிகர் விஷால் ஆஜராக வில்லை.

இதனால் நடிகர் விஷாலுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது சென்னை எழும்பூர் நீதிமன்றம். இதனால் விஷால் விரைவில் கைது செய்ய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.