MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருத்து
  • Spider Man Brand New Day Review : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே விமர்சனம்

Spider Man Brand New Day Review : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே விமர்சனம்

Spider Man Brand New Day Movie Review : டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட் நடித்துள்ள ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 30 2026, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Spider Man Brand New Day Review
Image Credit : Asianet News

Spider Man Brand New Day Review

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் (MCU) 38-வது திரைப்படமாகவும், டாம் ஹாலண்ட் நடித்த ஸ்பைடர்மேன் தொடரின் நான்காவது பாகமாகவும் வெளியாகியுள்ளது 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே'. இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், வழக்கமான சூப்பர் ஹீரோ சண்டைகளை மட்டுமல்லாமல், உணர்ச்சிகரமான மனித உறவுகளையும் மையப்படுத்தி ரசிகர்களை கவர முயற்சிக்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை டாம் ஹாலண்ட் தனது நடிப்பால் படத்தை தாங்கிச் செல்கிறார். அதே சமயம், மார்வெல் ரசிகர்களுக்கான பெரிய சர்ப்ரைஸாக இடைவேளையில் தோன்றும் அவெஞ்சர்ஸ் கதாபாத்திரம் திரையரங்கையே உற்சாகப்படுத்துகிறது.

Jana Nayagan Full Review : விஜய்யின் கடைசி படம் ஒர்த்தா?... ஒர்த் இல்லையா? ஜனநாயகன் முழு விமர்சனம் இதோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கதை என்ன?

கதை என்ன?

உலகத்திற்காக தனது அடையாளத்தை தியாகம் செய்த பீட்டர் பார்க்கர், தனது காதலி எம்.ஜே. மற்றும் நண்பர் நெட்டின் நினைவிலிருந்தும் மறைந்து தனிமையான வாழ்க்கையை வாழ்கிறார். இதற்கிடையில், தனது குடும்பத்தை இழந்த கோபத்தில் இருக்கும் புதிய வில்லன், டெலிபதி சக்தியின் மூலம் மக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பழிவாங்க முயற்சிக்கிறார். இந்த அச்சுறுத்தலை ஸ்பைடர்மேன் எப்படி எதிர்கொள்கிறார்? தனது நெருங்கியவர்களை மீண்டும் காப்பாற்ற முடியுமா? என்பதே மீதிக்கதை.

35
படம் எப்படி இருக்கிறது?
Image Credit : others

படம் எப்படி இருக்கிறது?

இந்த முறை ஸ்பைடர்மேனை வெறும் ஆக்‌ஷன் ஹீரோவாக மட்டும் காட்டாமல், தனிமை, காதல், தியாகம் மற்றும் பொறுப்பு ஆகிய உணர்வுகளுடன் இணைத்து இயக்குநர் கதையை நகர்த்தியுள்ளார். தனது உண்மையான எதிரி யார் என்பதை அறியாமல் போராடும் ஸ்பைடர்மேனின் குழப்பமும், காதலியை இழந்த வலியும் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. டாம் ஹாலண்டின் நடிப்பு பல இடங்களில் உணர்ச்சிப்பூர்வமாக கைகொடுக்கிறது. குறிப்பாக காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களை நெகிழ வைக்கின்றன.

படத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது ஸ்பைடர்மேன் - ஹல்க் மோதல். இந்த காட்சிகள் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், மார்வெல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய திரை அனுபவத்தை வழங்குகின்றன. டெலிபதி சக்தியை பயன்படுத்தும் வில்லனின் திட்டங்களும், அதனால் உருவாகும் பரபரப்பும் திரைக்கதைக்கு வித்தியாசமான சுவையை கொடுக்கின்றன.

45
பிளஸ் - மைனஸ் என்ன?
Image Credit : Asianet News

பிளஸ் - மைனஸ் என்ன?

டாம் ஹாலண்டின் இயல்பான மற்றும் உணர்ச்சிமிக்க நடிப்பு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. காதல் மற்றும் ஆக்‌ஷன் இரண்டையும் சமநிலைப்படுத்திய திரைக்கதை ஒரு ப்ளஸ். ஸ்பைடர்மேன் - ஹல்க் மோதல் காட்சிகள் ரசிகர்களுக்கு பெரிய விருந்து. சாடி சிங்கின் அமைதியான வில்லன் கதாபாத்திரம் கவனம் ஈர்க்கிறது. மைக்கேல் ஜியாக்சினோவின் பின்னணி இசை பல காட்சிகளுக்கு கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒளிப்பதிவு மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஹாலிவுட் தரத்தில் பிரமிக்க வைக்கின்றன. இதெல்லாம் பலமாக அமைந்துள்ளன.

படத்தின் இரண்டாம் பாதியில் வில்லன் கதாபாத்திரம் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கிளைமாக்ஸ், இடைவேளைக்கு கிடைத்த அதே அளவிலான பரபரப்பை தரத் தவறுகிறது. சில முக்கிய கதாபாத்திரங்களுக்கு போதிய முக்கியத்துவம் இல்லாததும் படத்தின் வேகத்தை ஓரளவு குறைக்கிறது. இதுவே மைனஸ் ஆக அமைந்துள்ளது.

55
ஒர்த்தா? ஒர்த் இல்லையா?
Image Credit : Entertainment Weekly

ஒர்த்தா? ஒர்த் இல்லையா?

'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' வழக்கமான சூப்பர் ஹீரோ திரைப்படமாக இல்லாமல், ஆக்‌ஷனுடன் உணர்ச்சிகளையும் கலந்த ஒரு மார்வெல் அனுபவத்தை வழங்குகிறது. சில குறைகள் இருந்தாலும், டாம் ஹாலண்டின் நடிப்பு, பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்காக இந்த படம் கண்டிப்பாக ஒருமுறை திரையரங்கில் பார்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. மார்வெல் ரசிகர்களுக்கும், ஆக்‌ஷன் மற்றும் லவ் டிராமா ரசிகர்களுக்கும் இந்த படம் நல்ல திரையரங்கு அனுபவத்தை வழங்கும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விமர்சனம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image2
Scene First Review : சூர்யாவின் சீன் படம் பிளாஸ்டா? வேஸ்டா? முதல் விமர்சனம் இதோ
Recommended image3
418 Review : சென்சார் போர்டே பார்த்து மிரண்ட படம்... ரசிகர்களை மிரள வைத்ததா? 418 பட விமர்சனம் இதோ
Related Stories
Recommended image1
Jana Nayagan Full Review : விஜய்யின் கடைசி படம் ஒர்த்தா?... ஒர்த் இல்லையா? ஜனநாயகன் முழு விமர்சனம் இதோ
Recommended image2
The Odyssey Review : கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ பிளாஸ்டா? வேஸ்டா? விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved