பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 34 ஆவது திரைப்பட பணிகளை தற்பொழுது மேற்கொண்டு வருகிறார் நடிகர் விஷால். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ள இரு நடிகர்கள் குறித்த தகவலை தற்பொழுது வெளியிட்டுள்ளார் அவர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான "தமிழ்" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கியவர் தான் ஹரி. பிரபல நடிகர் அருண் விஜய் அவர்களுடைய தங்கை ப்ரீத்தா விஜயகுமார் அவர்களின் கணவர் தான் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் திரை உலகில் ஆக்சன் திரைப்படங்கள் என்றாலே ஹரி என்று சொல்லும் அளவிற்கு பெரிய பெற்றவர் இவர்.

சாமி, அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல் என்று பல சூப்பர் ஹிட் ஆக்சன் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் தான் ஹரி. இறுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை என்ற திரைப்படத்தை அவர் இயக்கி இருந்தார். 

"அவரை போல ஒருவரை என் வாழ்க்கையில் சந்தித்ததில்லை".. ரஜினியை எக்கச்சக்கமாக புகழ்ந்த தமன்னா - ஜெயிலர் Memories!

இந்நிலையில் தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய இரு திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் விஷால் அவர்களை, அவரது 34 ஆவது திரைப்படத்தில் இயக்கியிருக்கி வருகின்றார் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த திரைப்படத்தில் இணைந்திருக்கும் இரு முக்கிய நடிகர்கள் குறித்த தகவலை விஷால் வெளியிட்டுள்ளார். 

Scroll to load tweet…

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அவர் வெளியிட்ட தகவலின்படி பிரபல இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. வேஷ்டி சட்டையில் சமுத்திரக்கனி, மற்றும் கோட் சூட்டில் நிற்கும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோரின் புகைப்படங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

Leo: திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் போடும் நிபந்தனை..! லியோ அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா?