"அவரை போல ஒருவரை என் வாழ்க்கையில் சந்தித்ததில்லை".. ரஜினியை எக்கச்சக்கமாக புகழ்ந்த தமன்னா - ஜெயிலர் Memories!
Tamannaah Bhatia : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய ஹிட்டான ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார் பிரபல நடிகை தமன்னா.
Tamannaah
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி வெளியாகி உலக அளவில் சுமார் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்த நிலையில் "காவாலா" என்கின்ற சூப்பர் ஹிட் பாடலுக்கு நடனமாடி அனைவரையும் ஈர்த்த நடிகை தான் தமன்னா.
Actress Tamannaah
இந்திய மொழிகள் பலவற்றும் முன்னணி நாயகியாக விளங்கிவரும் தமன்னா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடித்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். தன் வாழ்நாளில் இவ்வளவு பெரிய புகழுக்கு சென்ற பிறகும், தன்மையோடு நடந்து கொள்ளும் ஒரு மனிதரை இதுவரை பார்த்ததில்லை என்று கூறி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் தமன்னா.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Actress Tamannaah Bhatia
ஜெய்லர் திரைப்பட வெற்றியை தொடர்ந்து நடைபெற்ற வெற்றி விழாவில் அப்படத்தில் பணி செய்த அனைத்து ஊழியர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகை தமன்னா அவர்களும் பங்கேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய கரங்களால் பரிசுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.