இளம் பெண்ணிடம் போனில் ஆபாசமாக பேசியதற்கு, பிரபல மலையாள நடிகரும் சிம்பு, விஷால், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள,   நடிகர் விநாயகன் மீது 4  பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
நடிகர் விநாயகன்,  பெண் சமூக சேவகி மிருதுளா சசிதரன் என்பவர் சமூக வலைதள, பதிவை பார்த்து விட்டு, தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தது மட்டும் இன்றி,  மிருதுளா சசிதரனை  தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. 

இதனால்,  மிருதுளா வன்மையாக அவரை கண்டித்ததுடன்,  காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து நடிகர் வினாயகனை கைது செய்யக்கோரி கேரளாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், மிருதுளா கொடுத்த புகாரின் அடிப்படையில்,  கல்பற்றா பகுதி போலீசார், வினாயகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இந்த வழக்கின் அடிப்படையில் விநாயகன் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.