தமிழ் சினிமாவில் தொடர்ந்து டிராவல் பண்ண வேண்டுமானால் இந்த கடைசி பஸ்ஸை விட்டுவிடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தோ என்னவோ நாளை வெள்ளியன்று வெளியாகவிருக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்துக்காக ஓவர் ஹோம் ஒர்க் செய்துகொண்டிருக்கிறார் நடிகர் விமெல்.

இதற்காக யூடுபில் வெளியாகியிருக்கும் தனது ‘இ.எ.ம.இ’ பட ட்ரெயிலர் மற்றும் முன்னோட்டக் காட்சிகளில் கமெண்ட் எழுதி பரபரப்பாக்கி வைக்க பேட்டா, கன்வேயன்ஸ் கொடுத்து சிலரை நியமித்திருக்கிறார்.

’விமல் ராணுவம்’ என்ற பெயரில், அப்படி நியமிக்கப்பட்டவர்கள் கொடுத்த காசுக்கும் மேல கூவியிருக்கும் சில கமெண்டுகள் இவை...

‘விதியுடன் மோது, விமலுடன் மோதாதே’...கமலுடன் மோது, ஆனால் விமலுடன் மோதாதே...

வடிவேலு சொன்ன மாதிரி சும்மா விடிய விடிய மொறட்டு மொமன்டா இருக்கேடா... அடேய் என்னாடா பண்ணி வச்சு இருக்கீங்க...

பையன் பண்ண வேண்டியது எல்லாம் பொண்ணு பண்ற ! என்ன கருமோ ..எவ்ளோ டைம் தாங்குமா 😢😢??

நீ தலயா இரு... தளபதியா இரு ஆனா விமல் முன்னாடி கொஞ்சம் பார்த்தே இரு...

நல்ல வளர்ச்சி தமிழ் சினிமா இந்த மாதிரி வியாபார பண்ணுவதற்கு இதுக்கு பதிலாக மாமா வேலை பார்க்க வேண்டியது தான் ச்சி பரதேசி நாய்கள்

காமெடி என்ற பெயரில் காமலீலைகள் பன்னுறிங்களே, என்னடா இது தமிழ் சினிமாக்கு வந்த சோதனை.

ஏய் மத்திய அரசே 😣 விஜய் மல்லையாவுடன் மோது!! விமலுடன் மோதாதே...