ஒரு டப்பிங் ஆர்டிஸ்டாக சினிமாவிற்குள் நுழைந்து, இன்று தனக்கென்று தனி ரசிகர் கூட்டம் கொண்டுள்ள ஒரு சிறந்த நடிகர் அவர். தற்பொழுது முதல் முறையாக பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகின்றார். 

தமிழ் திரையுலகை பொருத்தவரையிலும் தங்கள் உடலை வருத்தி நடிக்கும் நடிகர்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக பல சிரத்தை மேற்கொண்டு நடிகர்கள் நடித்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது திரைப்படங்களுக்காக பலதரப்பட்ட ரிஸ்க்கான வேலைகளில் ஈடுபட்டு, மிகவும் தனித்துவம் வாய்ந்த நடிகராக, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை புகழின் உச்சியில் இருக்கிறார். அந்த வகையில் கமலுக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு "குட்டி கமலாக" இயங்கி வரும் ஒரு நடிகர் தான் "சியான்" விக்ரம். 

Scroll to load tweet…

ஒரு டப்பிங் ஆர்டிஸ்டாக சினிமாவிற்குள் நுழைந்து, இன்று தனக்கென்று தனி ரசிகர் கூட்டம் கொண்டுள்ள ஒரு சிறந்த நடிகர் அவர். தற்பொழுது முதல் முறையாக பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்து வருகின்றார். 

இதையும் படியுங்கள் : மீண்டும் காஷ்மீரில் லியோ ஷூட்டிங்.. மறுபடியும் முதல்ல இருந்தா.. ஷாக் ஆன விஜய்!

ரஞ்சித் இயக்கி வரும் "தங்கலான்" திரைப்படத்தில் மாளவிகா மோஹனன், பிரபல நடிகர் பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்காக ரஞ்சித், விக்ரம் மற்றும் படக்குழுவினர் எடுத்து வரும் முயற்சிகளை நாம் அனுதினமும் செய்திகளாக பார்த்து வருகிறோம். 

சில வாரங்களுக்கு முன்பு "தங்கலான்" படப்பிடிப்பில் நடந்த விபத்தில், விலா எலும்பில் முறிவு ஏற்பட்டு, சில நாள் ஓய்வுக்கு பிறகு தற்பொழுது மீண்டும் விக்ரம் படபிடிப்பு பணிகளில் இணைந்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் உரிமையாளர் தனஞ்செயன் ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பின்வருமாறு கூறியிருந்தார்.

"தங்கலான் திரைப்படத்தை உலகத்தரம் வாய்ந்த திரைப்படமாக நாங்கள் உருவாக்கி வருகின்றோம், நிச்சயம் இந்த திரைப்படத்தை ஆஸ்கர் வரை எடுத்துச் செல்ல நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். சியான் விக்ரம் மற்றும் பிற நடிகர், நடிகைகள் தங்கள் முழு திறனையும் இந்த படத்திற்காக செலவழித்து வருகின்றனர்". 

"தற்போது மீதமுள்ள 10 நாள் ஷூட்டிங் பணிகள் முடிந்த பிறகு இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் விரைவில் துவங்கும், இறுதியாக படத்தை ஆஸ்கர் கொண்டுசெல்ல தேவையான அனைத்து முயற்சிகளையும் படக்குழு மேற்கொள்ளும்" என்று உறுதிபட கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : மாரி காட்டுல மழை தான்.. சொகுசு கார் பரிசளித்த உதயநிதி!