நடிகர் சீயான் விக்ரம்  அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' படத்தில் நடித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையிலும், இரண்டாம் கட்ட ஷூட்டிங் கொல்கத்தாவிலும் நிறைவடைந்தது. மூன்றாம் கட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர் ரஷ்யா சென்ற போது, உலகம் முழுவதும் கொரோனா பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழுவினர் உடனடியாக இந்தியா திரும்பினர். 

 

விக்ரமின் 58 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தை 7 க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விக்ரமுக்கு ஜோடியாக, கே.ஜி.எப். படத்தில் நடித்த நடிகை ஸ்ரீநிதி நடிக்கிறார். இந்த படத்தில் விக்ரம் 20 கெட்டப்புகளில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: கண்டவன் எல்லாம் கலாய்க்கும் நிலைக்கு கணவரால் தள்ளப்பட்ட சமந்தா... வைரலாகும் இதை பார்த்தால் புரிஞ்சுக்குவீங்க!

கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படம் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார்.  “டிமாண்டி காலனி”, “இமைக்கா நொடிகள்” என வித்தியாசமான கதைகளை கையாண்ட அஜய் ஞானமுத்துவுடன் சீயான் விக்ரம் கைகோர்த்துள்ளதால் ஒட்டு  மொத்த திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. 

 

இதையும் படிங்க:  பாவாடை, தாவணியில் சும்மா நச்சுன்னு இருக்கும் லாஸ்லியா... வைரலாகும் இலங்கை பெண்ணின் மனதை மயக்கும் அழகு...!

இந்நிலையில் கொரோனா பிரச்சனையால் தத்தளிக்கும் தமிழ் சினிமாவை காக்கும் விதமாக நடிகர், நடிகைகள் பலரும் தங்களது சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்து வருகின்றனர். அந்த வரிசையில் கோப்ரா படத்தின் இயக்குநரான அஜய் ஞானமுத்து தனது சம்பளத்தில் இருந்து 40 சதவீதத்தை குறைத்துக் கொண்டுள்ளார். இந்த தொகை கோடி ரூபாய்க்கு மேல் தாண்டும் என கோலிவுட்டில் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக இயக்குநர் ஹரி, நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.