விஜயகுமார் பேத்திக்கு திருமணம்.. மணப்பெண்ணை உற்சாகமாக வரவேற்ற குடும்பம்.. வைரல் வீடியோ..
அனிதா விஜயகுமாரின் மகளுக்கு இந்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில், அவர் சென்னை வந்த வீடியோவை அனிதா பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜயகுமாருக்கு 2 மனைவிகள். முதல் மனைவியான முத்துக்கண்ணுவிற்கு பிறந்த பிள்ளைகள் கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார், அருண் விஜய். இவர்களில் கவிதா விஜயகுமார், சர்தகுமாரின் கூலி படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார். அருண் விஜய்யும் பல படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில், தற்போது வில்லன் கேரக்டரிலும் மிரட்டி வருகிறார்.
விஜயகுமார் சக நடிகையான மஞ்சுளாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு பிறந்தவர்கள் வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி ஆகியோர். இவர்கள் மூவரும் படங்களில் நடித்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்தது தான். இதில் வனிதா மட்டும் குடும்ப தகராறு காரணமாக தனியாக வாழ்ந்து வருகிறார். அவரை தவிர மற்ற 5 பிள்ளைகளும் ஒற்றுமை உடன் வாழ்ந்து வருகின்றனர்.
இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் கியூட் போஸ்.. ஆதி - நிக்கி ஜோடியின் வேலண்டைன்ஸ் டே கிளிக்ஸ்..
ஆனால் விஜயகுமார் குடும்பத்தில் திரையில் நடிக்காத ஒரே மகள் என்றால் அது அனிதா விஜயகுமார் தான். 1973-ம் ஆண்டு பிறந்த அனிதா விஜயகுமார் ஒரு மருத்துவர் ஆவார். கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட அனிதா கத்தார் நாட்டில் செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
அனிதாவின் மகள் தியாவும் மருத்துவராக இருக்கிறார். இவருக்கு திலன் என்பவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் ஆனது. இதுதொடர்பான புகைப்படங்கள் அப்போது வைரலானது. இந்த நிலையில் தியா - திலன் ஜோடி இந்த மாதம் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளது.
சினிமாவில் நடிப்பதற்காக வேலையை விட்ட நடிகர்கள்.. என்ன வேலை செய்தனர் தெரியுமா?
இந்த திருமணத்திற்காக தனது தந்தை விஜயகுமார், சகோதரி கவிதா ஆகியோருடன் அனிதா பல பிரபலங்களுக்கு அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் ரஜினி, சூர்யா, தனுஷ் ஆகியோரின் குடும்பங்களுக்கு அனிதா நேரில் சென்று அழைப்பு விடுத்தார். இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியானது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிதா அவ்வப்போது தனது புகைப்படங்களையும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். 50 வயதாகும் அனிதா தற்போது இளமை தோற்றத்துடன் இருப்பதை அந்த போட்டோகளில் பார்க்க முடியும்.
இந்த நிலையில் தனது திருமணத்திற்காக தியா நேற்று சென்னை வந்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ என் பேபி ஒருவழியாக இங்கு வந்துவிட்டாள். அவளின் திருமணத்திற்காக மணப்பெண் வந்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் விமான நிலையத்தில் இருந்து வரும் தியாவை அவரின் குடும்பத்தினர் வரவேற்பதையும், அம்மா பெரியம்மா பாட்டி ஆகியோர் தியாவுக்கு ஆரத்தி எடுப்பதையும் பார்க்க முடிகிறது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.