Asianet News TamilAsianet News Tamil

அன்புக்குரியவர்களுடன் மறக்க முடியாத தருணம்... அருண் விஜய் அக்கா அனிதா விஜயகுமாரின் உருக்கமான பதிவு..

நடிகர் விஜயகுமார் மகள் அனிதா விஜயகுமாரின் வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

Actor Vijayakumar daughter Anitha vijayakumar shared her latest video on instagram Rya
Author
First Published Nov 9, 2023, 11:07 AM IST | Last Updated Nov 9, 2023, 11:46 AM IST

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவருக்கு 2 மனைவிகள். அவரின் முதல் மனைவியான முத்துக்கண்ணுவுக்கு பிறந்தவர்கள் தான் கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார், அருண் விஜய். பின்னர் நடிகை மஞ்சுளாவை விஜயகுமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் மஞ்சுளாவிற்கு பிறந்த குழந்தைகள்..விஜயகுமாரின் பிள்ளைகளில் அனைவருமே திரைத்துறையில் கால் பதித்தவர்கள் தான். கவிதா விஜயகுமார் கூட கூலி என்ற படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார். மற்றபடி, அருண் விஜய், வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என அனைவரும் பல படங்களில் நடித்துள்ளனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆனால் விஜயகுமார் குடும்பத்தில் திரைத்துறையில் கால் பதிக்காத ஒரே மகள் என்றால் அது அனிதா விஜயகுமார் தான். 1973-ம் ஆண்டு பிறந்த அனிதா விஜயகுமார் ஒரு மருத்துவர் ஆவார். கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட அனிதா வெளிநாட்டில் செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். 

Actor Vijayakumar daughter Anitha vijayakumar shared her latest video on instagram Rya

தற்போது கத்தாரில் வாழ்ந்து வரும் வெகேஷனுக்காக கடந்த மாதம் இந்தியா வந்திருந்தார். தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிட்ட அவர், சென்னையில் புதிய ஒன்றையும் வாங்கினார். தனது தாய் தந்தை, தங்கைகளான ப்ரீத்தா, ஸ்ரீ தேவி, தனது தம்பி விஜயகுமார் மற்றும் நண்பர்களுடன் இருந்த புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். 

ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்... 6 நாள் சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி - FDFS எப்போ தெரியுமா?

பின்னர் மீண்டும் கத்தார் திரும்பிய அனிதா விஜயகுமார், நவராத்திரி கொண்டாட்டங்கள் தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அவரின் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில் தற்போது ஒரு புதிய கொண்டாட்ட வீடியோவை அனிதா இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அவரின் இன்ஸ்டா பதிவில் “ எனது அன்புக்குரியவர்களுடன் ஒரு அழகான கொண்டாட்டம். இந்த சுற்றுலாவுக்காக 2 மாதங்கள் பிளான் செய்தோம், இதற்காக எடுத்த முயற்சியும், இந்த டிரிப்பை மிகவும் மதிப்புக்குரியதாக மாற்றி உள்ளது. சென்ற இந்த இந்த ட்ரிப் எங்கள் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக மாறி உள்ளது. மீண்டும் ஒருமுறை என் டார்லிங் பெண்களுக்கு நன்றி..” உருக்கமாக பதிவிட்டுள்ளார். தோழிகள் மட்டுமின்றி  அனிதாவின் அக்கா கவிதா, அவரின் மகள் தியா ஆகியோரும் அவருடன் சென்றுள்ளனர்.அந்த ட்ரிப்பில் எடுக்கப்பட்ட மகிழ்ச்சியான தருணங்களின் போட்டோக்களை தொகுத்து வீடியோவாக பதிவிட்டுள்ளார் அனிதா.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios