Asianet News TamilAsianet News Tamil

2026ல் கப்பு முக்கியம் பிகிலு.. ஒயின்ஷாப் முதல் தல அஜித் வரை.. நடிகர் விஜய் பேச்சு - இதை கவனிச்சீங்களா?

2026 ல புட்பால் மச் இருக்குனு சொல்லுவேன். இன்னும் சீரியஸா சொல்லனுமான என்ன சொல்லுவிங்க என்ற கேள்விக்கு அப்போது தான் கப்பு முக்கியம் பிகிலு என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.

Actor Vijay speech about his politics entry at leo success meet-rag
Author
First Published Nov 1, 2023, 11:45 PM IST

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக தொடர்ந்து பெரும் சாதனை படைத்து வருகிறது. 

லியோ படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் உலகம் முழுவதும், முதல் 7 நாட்களில்  ரூ.461 கோடியும் 12 நாட்களில் ரூ.540 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக நேற்று படக்குழு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 இப்படத்தின் வெற்றிவிழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.  அப்போது பேசிய நடிகர் விஜய், “எந்த எதிர்பார்ப்பும் இல்லாம கொடுக்குற அன்புக்கு நான் என்ன செய்யப் போறேன்... உங்க உடம்புக்கு செருப்பாக தச்சு போட்டா கூட ஈடாகாது. கொஞ்ச நாளா சோசியல் மீடியால பாக்கறேன். 

இந்த கோவம் லாம் அதிகமா இருக்கே, ஏன் யார் மனசையும் புண்படுத்த வேண்டாம். நமக்கு நிறைய வேலைகள் இருக்கு. வீட்டுல அப்பா அடிக்கிற புள்ள என்ன பண்ணும். அது மாதிரி நினைச்சு விட்ருங்க... காந்தி சொல்ற மாதிரி தான் `non violence is powerful than violence'. ஸ்கூல், காலேஜ் பக்கத்துல தான் வயின் ஷாப் இருக்கு.. அவுங்க என்ன அடிச்சுட்டு போறாங்களா. அவுங்கலாம் ரொம்ப தெளிவு. என் படம் நல்லா இல்லைனாலும் நல்ல இல்லைன்னு போயிடறாங்க.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

உங்கள்ல பலர் சொல்லமையே பல விஷயங்கள் செய்றீங்க என்று பேசினார் விஜய். லோகேஷ் உங்கள் கட்சியில் இணைந்தால் என்ன பதவி கொடுபீர்கள் என கேட்டதற்கு , போதை பொருள் ஒழிப்பு துறை கொடுப்பேன் என விஜய் பதில் அளித்தார். கல்வி அனைவருக்கும் சரி சமமாக கிடைக்கனும். மக்கள் பிடிச்சா தட்டி கொடுப்பார்கள். பிடிக்காவிட்டால் தட்டி விடுவார்கள்.

2026 பத்தி சொல்லனும்னா நீங்க என்ன சொல்லுவிங்க என்ற கேள்விக்கு பதில் சொன்ன விஜய், 2025 க்கு பிறகு 2026 என்று சொல்லுவேன். சீரியஸா சொல்லனும்னா என்ன சொல்லுவிங்க, 2026 ல புட்பால் மச் இருக்குனு சொல்லுவேன். இன்னும் சீரியஸா சொல்லனுமான என்ன சொல்லுவிங்க. அப்போது தான் கப்பு முக்கியம் பிகிலு என பதில் அளித்தார் விஜய்.

அதேபோல சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கும் பதில் அளித்தார். இதுதொடர்பாக தொடர்ந்து பேசிய விஜய், புரட்சி தலைவர் ஒருத்தர்தான், நடிகர் திலகம், புரட்சி கலைஞர் விஜய் காந்த்,உலக நாயகன் ஒருத்தர்தான், சூப்பர் ஸ்டார் ஒருத்தர்தான், தல ஒருத்தர்தான். தளபதி க்கு அர்த்தம் தெரியுமா? நீங்க மன்னர்கள் நீங்க ஆணையிடுற விஷயங்களை நான் செய்யிற தளபதி” என்று தனது ஸ்பீச்சில் வழக்கம் போல அரசியல் ஆசைகளை வெளிப்படுத்தி, ரசிகர்களை தூண்டியுள்ளார் நடிகர் விஜய்.

கீழே வந்து தான் ஆகணும்.. ரஜினி சொன்ன கழுகு கதையும், ரத்னகுமார் கிளப்பிய சர்ச்சையும்!!

Follow Us:
Download App:
  • android
  • ios