தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடைத்தைப் பிடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளவர் நடிகர் விஜய். இந்நிலையில் இவரை தொடர்ந்து இவருடைய மகனும் திரையுலகை சார்ந்த படிப்பை தேர்வு செய்து, அதற்காக கனடா செல்ல உள்ளதாக கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.

நடிகர் விஜய்:

இளைய தளபதி என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் விஜய். நேற்றைய தினம் தான் தன்னுடைய 44 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். தூதுக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகத்தை சோகத்தில் மூழ்கடித்ததால், இந்த வருடம் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாடத்தை தவிர்த்து விட்டார்.

கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்கள்:

விஜய் பிறந்த நாள் கொண்டாடத்தை தவிர்த்தாலும், விஜய் ரசிகர்கள் பல நலத்திட்டங்களை செய்து சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் ரசிகர்களை குஷியாக்கும் விதமாக 'சர்கார்' படத்தின் போஸ்டரும் வெளியாகியது. 

திரைதிரையில் கால் பதிக்கும் மகன்:

இந்நிலையில் தற்போது 12 ஆம் வகுப்பு படிப்பை முடித்துள்ள நடிகர் விஜயின் மகன் சஞ்சய், தன்னுடைய மேல்படிப்பிற்காக கனடாவிற்கு செல்ல உள்ளாராம். 

மேலும் தந்தையை தொடர்ந்து இவரும் திரையுலகம் சார்ந்த பிலிம் மேக்கிங் தொடர்பான படைப்பை தான் தேர்வு செய்து படிக்க உள்ளாராம். இதனால் எப்படியும் வருங்காலத்தில் சஞ்சய் திரையுலகில் தான் நடிகராகவோ  அல்லது இயக்குனராகவோ கால் பதிப்பார்  என்று உறுதியாகியுள்ளதால் விஜய் ரசிகர்கள் இந்த விஷயத்தை வைரலாக்கி வருகிறார்கள் மேலும் பலர் இவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.