கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் அனைத்து வுஇதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பெப்சி தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியாக பாடகி சைந்தவி... முதன் முறையாக வெளியான க்யூட் போட்டோஸ்...!

மாஸ்டர், இந்தியன் 2 உள்ளிட்ட பல்வேறு படங்களின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விஜய் - விஜய் சேதுபதி முதன் முறையாக ஒன்றாக நடித்துள்ளதால் மாஸ்டர் படத்தின் மீதான் எதிர்பார்பு வேற லெவலுக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி சில ஆண்டுகளாக   கிடப்பில் போடப்பட்டுள்ள விஜய் சேதுபதி படம் குறித்து ஒரு சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது. 

இதையும் படிங்க: ப்பா...‘கருப்பன்’ பட நடிகையா இது?.... ஓவராய் இளைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறிய தான்யா...!

நடிகர்கள் விஜய்  சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் இடம் பொருள் ஏவல் படம் முழுமையாக முடக்கப்பட்ட பிறகும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் இடம் பொருள் ஏவல். தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நந்திதா, ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் முதல் முறையாக யுவன் சங்கர் ராஜாவும் வைரமுத்துவும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கருவாக கொண்ட கதை. சீனு ராமசாமியின் நான்காவது படைப்பு இது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு இடம் பொருள் ஏவல் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் தீயாய் களம் இறங்கியுள்ளதாம்.