தமிழ் சினிமாவின் கறுப்பு தினங்களில் ஒன்று என்று சொல்லக்கூடிய அளவுக்கு நேற்றும் அதன் முன் தினமும் அஜித்,விஜய் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அசிங்கமாக வலைதளங்களில் அடித்துக்கொண்டார்கள். அவர்களுக்கு திரையுலகைச் சேர்ந்த அனைவரும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

அஜித்தின் திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை' அடுத்த வாரம் வெளியாக உள்ளதை ஒட்டி மீண்டும் இரு தரப்புக்கும் மத்தியில் பெரும் பஞ்சாயத்து துவங்கியது. அந்தப் படத்தை விமர்சித்து இழிவுபடுத்தும் வகையில் #ஆகஸ்ட்8_பாடைகட்டு என்று விஜய் ரசிகர்கள் நேற்று ட்ரெண்ட் செய்தனர். இதற்கு பதிலடியாக அஜித் ரசிகர்கள் மீண்டும் #RIPactorVIJAYஎன்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தனர். 

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக #LongLiveVIJAY என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் இந்திய அளவில் டாப் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பிரபலங்களும் விஜய்க்கு ஆதரவாக #LongLiveVIJAY என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில், விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சஞ்சீவ், தனது டுவிட்டர் பக்கத்தில், ‘விஜய் பார்க்காத துரோகமும் இல்ல... விஜய் அளவுக்கு எதிரிகளும் யாருக்கும் இல்ல... இருந்தும் திரையில் விஜய் அதை பத்தி பேசினது இல்லை. பெருமையா சொல்லுவேன் என் நண்பன் Joseph Vijay to #ThalapathyVijay  #LongLiveVIJAY’ என்று பதிவு செய்திருக்கிறார்.