Actor Vijay : மக்களுக்காக பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வரும் விஜய் ரசிகர்களும், மஞ்சப்பைகளை பிரபலப்படுத்தும் பணியில் இறங்கி உள்ளனர்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதால், அதற்கு மாற்றான பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்தது.

மீண்டும் மஞ்சப்பை

இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை மேலும் குறைக்கும் விதமாக பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இதற்காக கடந்தாண்டு டிசம்பர் மாதம் “மீண்டும் மஞ்சப்பை” என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் ஆரம்பித்து வைத்தார் முதல்வர்.

மஞ்சப்பைகளை பிரபலப்படுத்தும் விஜய் ரசிகர்கள்

இந்நிலையில், மக்களுக்காக பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வரும் விஜய் ரசிகர்களும், மஞ்சப்பைகளை பிரபலப்படுத்தும் பணியில் இறங்கி உள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை, சமூக நலப்பணி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஸ்டாலின் ரூட்டில் விஜய்

கடந்த ஞாயிறன்று அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்ட விஜய் மக்கள் இயக்கத்தினர். பொதுமக்களுக்கு இலவசமாக மஞ்சப்பைகளை வழங்கினர். நடிகர் விஜய்யின் உத்தரவின் பேரில் தான் இந்த மஞ்சப்பை வழங்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதன்மூலம் முதல்வர் ரூட்டில் செல்கிறாரா விஜய் என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்... Maamannan movie : கர்ணன் தனுஷ் கெட் அப்பில் வடிவேலு... மாலை மரியாதையுடன் வைகைப்புயலை வரவேற்ற மாமன்னன் படக்குழு