விஜய் தந்தைக்கு இப்படி ஒரு நிலைமையா?... பிளாட்ஃபார்மில் படுத்து தூங்கும் எஸ்.ஏ.சி - வெளியான ஷாக்கிங் வீடியோ
SA Chandrasekar : 60 வருடங்களுக்கு முன்னதாக சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்த எஸ்.ஏ.சி. சென்னை தி நகரில் உள்ள பிளாட்ஃபாரத்தில் தான் சுமார் 47 நாட்கள் தங்கி இருந்தாராம்.
1980-களில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக ஜொலித்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன், தேவா, ஒன்ஸ் மோர், நெஞ்சிருக்கும் வரை போன்ற படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது டாப் டைரக்டர்களாக விளங்கும் ஷங்கர், எம்.ராஜேஷ், பொன்ராம் ஆகியோர் இவரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் தான். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய்யின் தந்தையும் இவர், அவரை திரையுலகில் நடிகராக அறிமுகப்படுத்திய பெருமையும் எஸ்.ஏ.சி-யை சேரும்.
கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் கடந்த சில ஆண்டுகளாக பேசிக்கொள்வதில்லை. இந்த நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை தி-நகரில் உள்ள பிளாட்ஃபார்மில் படுத்து உறங்குவது போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆனது.
புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதில் தான் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார் எஸ்.ஏ.சி. திரையுலகில் தான் சாதித்த விஷயங்கள் பற்றியும், தான் எதிர்கொண்ட சோதனைகள் பற்றியும் அந்த வீடியோவில் பேசி உள்ளார். அப்போ ஏன் பிளாட்ஃபார்மில் இருந்து வீடியோ வெளியிட்டார் என்று தானே யோசிக்கிறீர்கள், அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
அது என்னவெனில், 60 வருடங்களுக்கு முன்னதாக சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்த எஸ்.ஏ.சி. சென்னை தி நகரில் உள்ள பிளாட்ஃபாரத்தில் தான் சுமார் 47 நாட்கள் தங்கி இருந்தாராம். அதனை நினைவூட்டும் விதமாக தான் தற்போது அங்கிருந்து தனது முதல் யூடியூப் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேலும் இதில், ‘ஒரு கட்டத்தில் வெற்றி போதை நம் கண்ணை மறைத்துவிடும்... காதுகளை செவிடாக்கிவிடும்’ என எஸ்.ஏ.சி பேசி உள்ளது, அவரது மகன் விஜய்க்கு எதிரான தனது மன வருத்தத்தை பதிவு செய்யும் விதமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். எஸ்.ஏ.சி-யில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Beast : என்ன நண்பா ரெடியா... பீஸ்ட் ஆடியோ லாஞ்சுக்கு தேதி குறித்த விஜய் - அரசியல் பேசி அதகளம் பண்ணூவாரா தளபதி?