Beast : என்ன நண்பா ரெடியா... பீஸ்ட் ஆடியோ லாஞ்சுக்கு தேதி குறித்த விஜய் - அரசியல் பேசி அதகளம் பண்ணூவாரா தளபதி?
Beast movie audio launch : ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பீஸ்ட் ஆடியோ லாஞ்ச் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்த நெல்சன், தற்போது விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் பிரபல டோலிவுட் நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.
பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் செல்வராகவன், டோகிபாபு, ஷான் டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு நிர்மல் குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு பண்டிகையை ஒட்டி இப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.
ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பீஸ்ட் ஆடியோ லாஞ்ச் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற மார்ச் 20-ந் தேதி அவ்விழா நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
வழக்கமாக இசை வெளியீட்டு விழாக்களில் அரசியல் பேசி அதகளப்படுத்துவார் விஜய். அதேபோல் இந்த முறையும் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சு இடம்பெறுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடைசியாக மாஸ்டர் படத்தின் விழாவில் கலந்துகொண்ட விஜய், அதன்பின் தற்போது தான் சுமார் 2 ஆண்டுகள் கழித்து பீஸ்ட் பட விழாவில் கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... “செத்த சும்மா இரு மீரா! வயசான காலத்துல படுத்தாத!” ஜாஸ்மினிடம் பெருமூச்சுவிடும் அங்கிள் ஹீரோக்கள்..!