ஆடியோ லாஞ்ச் இல்லேனா என்ன? ஆட்சியவே புடிச்சிட்டா . . . விஜய் ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்
நடிகர் விஜய்யின் லியோ படத்திற்கான இசை வெளியீட்டு விழா திடீரென ரத்தான நிலையில், ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா, செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் துரிதமாக நடந்து வந்தது.
மேலும் இசை வெளியீட்டு விழாவிற்கான டிக்கெட்டுகளும் பரபரப்பாக விற்பனை செய்யப்பட தயாராக இருந்த நிலையில், திடீரென 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தயாரிப்பு நிறுவனத்தின் இந்த திடீர் முடிவுக்கு காரணம், 'லியோ' ஆடியோ லான்ச் டிக்கெட்டுகள் போலியாக அச்சிடப்பட்டு விற்பனை செய்ய திட்டமிட்டதாகவும், அதேபோல் அரசியல் அழுத்தமும் ஒரு காரணம் என கூறப்பட்டது. ஆனால் இதை மறுத்த தயாரிப்பு நிறுவனம், "லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக, டிக்கெட் கேட்டு பல கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. எனவே பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, லியோ ஆடியோ வெளியீட்டை நிறுத்த முடிவு செய்ததாகவும், ரசிகர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அடிக்கடி 'லியோ' படத்தின் அப்டேட்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது."
இந்நிலையில், லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் ரத்தனாது ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. படம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், அதனை ஏற்க மறுத்து ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆடியோ லாஞ்ச் ரத்தானால் என்ன, ஆட்யவே புடிச்சிடலாம் என்ற தொணியில் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாங்கி 4 நாட்களில் எரிந்து எலும்புக்கூடான கார்; வேதனையில் உரிமையாளர் - சாத்தான்குளத்தில் பரபரப்பு
இது ஒருபுறம் இருக்க படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் காவல்துறைக்கு எழுதப்பட்டுள்ள கடிதம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி, 30ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் இளை வெளியீட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு காரணம் கருதி நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக குறிப்பிட்டு அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.