கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உலகம் முழுவதும் உதவி கரம் நீட்டி வரும் சமயத்தில் நடிகர் நடிகைகள் என சினிமா பிரபலங்கள் முதல் பொதுமக்கள், பெரிய ஜாம்பாவான்கள்....சாதாரண மக்கள்  சிறுவர்கள் என அனைவருமே உதவி செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் 70 லட்சம் ரூபாயை கேரள மக்களுக்கு நிவாரண தொகையாக கொடுத்து உள்ளார். இந்த பணத்தை, தங்களது ரசிகர்கள் மூலம் கேரள மக்களுக்கு சென்றடைய செய்துள்ளார் நடிகர் விஜய்.இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.15 லட்சமும், நடிகர் கமல் ரூ.25 லட்சமும் கொடுத்து உள்ளனர். இதற்கு முன்னதாக நடிகர் விக்ரம் கொடுத்த 30 லட்சம் ரூபாய் தான் நடிகர்கள் கொடுத்த தொகையிலேயே  அதிகமாக இருந்தது.

ஆனால் தற்போது நடிகர் விஜய் 70 லட்சம் நிதி உதவி செய்து முதலிடத்தை பிடித்து உள்ளார்.யாரெல்லாம் இதுவரை எவ்வளவு நிதி கொடுத்து உள்ளனர் என்பதை சரியாக நோட் செய்து வந்த விஜய், சரியான தருணத்தில் அதிக தொகையை கேரள மக்களுக்கு நிவாரண நிதியாக வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.