தளபதி விஜய், தன்னுடைய மகள் பேட்மின்டன் விளையாடுவதை ஓரமாக நின்றபடி ரசித்துக்கொண்டே நடந்து செல்லும் பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய், சங்கீதா தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். தல அஜித்தை போலவே தளபதி விஜய்யும் தனது பிள்ளைகள் மீது மீடியா வெளிச்சம் படாமல் வளர்க்கிறார்.

விஜய்யின் மகன் அல்லது மகளின் புகைப்படங்களோ, வீடியோக்களோ வெளியே வந்தால் அது பழையதாக இருந்தாலும் அதனை சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் வைரலாக்கி விடுகின்றனர். 

தளபதி விஜய்யின் செல்ல மகள் திவ்யா சாஷா சென்னையில் உள்ள சர்வதேச பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். அங்கு தனது தோழிகளுடன் திவ்யா சாஷா பேட்மின்டன் கோச்சிங் எடுத்துக்கொண்டபோது, அன்பு தந்தையாக மகள் விளையாடுவதை ரசித்தபடி விஜய் கடந்து போகும் வீடியோ தான் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. 

2018 ஆம் ஆண்டு வெளியான இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் அதிகம் ரசித்து வருகிறார்கள்.  இறுதியாக திவ்யா சாஷா அப்பா விஜய்யுடன் சேர்ந்து தெறி படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.