Asianet News TamilAsianet News Tamil

நான் எப்போவுமே கூல் நண்பா.. வீட்டில் செல்லப்பிராணியுடன் Chill பண்ணும் தளபதி விஜய் - வீடியோ செம வைரல்!

Thalapathy Vijay Video : தளபதி விஜய் வெளிநாட்டில் நடந்த தனது 68வது பட பணிகளை முடித்துவிட்டு அண்மையில் சென்னை திரும்பினார். இந்நிலையில் அவரது வீட்டு தோட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி உள்ளது.

Actor Thalapathy Vijay chilling with pet dog in his house video went viral in internet ans
Author
First Published Nov 18, 2023, 2:17 PM IST | Last Updated Nov 18, 2023, 2:17 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கிவரும் தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியான நிலையில், தீபாவளி திருநாளையும் கடந்து தனது ஐந்தாவது வாரத்தில் வெற்றிகரமாக பயணித்து வருகிறது லியோ திரைப்படம். 

இந்நிலையில் அப்பட பணிகளை முற்றிலுமாக முடித்து, அப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டங்களில் பங்கேற்று, அதனைத் தொடர்ந்து தனது அடுத்த பட பணிகளை தளபதி விஜய் தொடங்கினார். பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தனது 68வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் தளபதி விஜய். 

Dhanush Son: ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டிய தனுஷ் மகன் யாத்ராவுக்கு அபராதம்! எவ்வளவு தெரியுமா?

ஏற்கனவே சென்னையில் இந்த படத்திற்கான பூஜை நடந்து முடிந்தது, சென்னையிலேயே ஒரு பாடலும் பதிவு செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தில் பிரபல மூத்த தமிழ் நடிகர்கள் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா, நடிகைகள் சினேகா மற்றும் லைலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சவுத் ஆப்பிரிக்காவில் இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு, தாய்லாந்தில் தளபதி 68 திரைப்படத்திற்கான பட  பணிகள் தொடங்கியது. 

 

லியோ பட வெற்றி விழாவை முடித்து நேரடியாக தாய்லாந்து சென்ற தளபதி விஜய், சில தினங்களுக்கு முன்பு தனது படபிடிப்பு பணிகளை தாய்லாந்தில் முடித்துவிட்டு சென்னை திரும்பினார். இந்நிலையில் தளபதி விஜய் தனது வீட்டில் தன்னுடைய செல்ல பிராணிக்கு உணவு வழங்கும் வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பொதுவெளியில் மட்டுமல்லாமல் தனது வீட்டுக்குள்ளும் மிகவும் கூலாக தனது செல்ல பிராணிகளோடு நேரத்தை செலவிட்டு கொண்டு தனது வாழ்க்கையை அனுபவித்து வருகிறார் விஜய் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios