Dhanush Son: ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டிய தனுஷ் மகன் யாத்ராவுக்கு அபராதம்! எவ்வளவு தெரியுமா?
நடிகர் தனுஷ் மகனுக்கு போக்குவரத்துத்துறை ஓட்டுநர் உரிமம் உரிமம் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓடியதாக அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
dhanush
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேரனும், நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூத்த மகனுமான யாத்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு, தன்னுடைய வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் அருகில் பைக் ஓட்டி பயிற்சி செய்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
Dhanush son bike raid
17 வயது ஆகும் யாத்ரா ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்பே, பைக் ஒட்டியது மட்டும் இன்றி ஹெல்மெட் அணியாமல் அவர் பைக் ஓட்டியதற்கு சிலர் தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்தினர். இதை தொடர்ந்து போயஸ் தோட்டத்தில் உள்ள தனுஷின் வீட்டிற்கு சென்ற போக்குவரத்து துறையினர், ஓட்டுநர் உரிமம் மற்றும் ஹெல்மெட் அழியாமல் வண்டி ஓட்டிய, தனுஷின் மகனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ள சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது.
Dhanush Son
அதே நேரம், தன்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் கூட பிரபலங்களின் பிள்ளைகள் வண்டி ஓட்டி பழகுவது தவறா? என தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Aishwarya Dhanush Sons
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவரும் கடந்தாண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் நிலையில், இவர்களுடைய மகன்கள் இருவரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்ந்து அவருடைய அப்பா வீட்டிலும், தன்னுடைய தந்தை தனுஷின் வீட்டிலும், மாறி மாறி இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.