44 வயதிலும் பிட்னஸில் பின்னி பெடலெடுக்கும் ஜோதிகா - வெறித்தனமான ஒர்க்அவுட் செய்யும் வீடியோ வைரல்
நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா தலைகீழாக நின்றபடி ஒர்க்அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. இவரின் துருதுரு நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக இருந்தபோதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜோதிகா. திருமணத்துக்குப் பின் தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் பிறந்ததால் சில ஆண்டுகள் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார் ஜோதிகா.
குழந்தைகள் வளர்ந்த பின்னர் மீண்டும் சினிமாவில் தன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஜோதிகா, தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி நடிகர் சூர்யாவுடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதன் மூலம் தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்.
இதையும் படியுங்கள்... லியோ-வில் லோகேஷ் கனகராஜ் சஸ்பென்ஸாக வச்சிருந்த விஷயம் லீக் ஆகிடுச்சு... நிஜமாவே இது வேறலெவல் மேட்டரா இருக்கே!
ஜோதிகா நடிப்பில் தற்போது காதல் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஜோதிகா. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இது தவிர இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் ஜோதிகா. குழந்தைகள் மும்பையில் படித்து வருவதால் தற்போது சூர்யாவும் ஜோதிகாவும் அங்கேயே ஒரு வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டனர்.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள ஜோதிகா இன்று தனது ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது. தலைகீழாக நின்றபடி நடிகை ஜோதிகா ஒர்க்கவுட் செய்வதை பார்த்து பல்வேறு இளம் நடிகைகளும் வியந்துபோய் வாவ் என கமென்ட் செய்து வருகின்றனர். 44 வயதிலும் இப்படி வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் ஜோதிகாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... குஷ்புவின் மகளா இது..? சினிமா நடிகைகளை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு கவர்ச்சியில் புகுந்து விளையாடிய அவந்திகா