குஷ்புவின் மகளா இது..? சினிமா நடிகைகளை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு கவர்ச்சியில் புகுந்து விளையாடிய அவந்திகா
நடிகை குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாக பரவி வருகின்றன.
நடிகை குஷ்பு, 90-களில் தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகையாக வலம் வந்தார். அந்த சமயத்தில் கனவுக்கன்னியாக இருந்து வந்த குஷ்புவுக்கு ரசிகர்கள் மனதில் மட்டுமல்லாமல் நிஜத்திலேயே கோவில் கட்டி அழகு பார்த்தனர். அந்த அளவுக்கு தீவிர ரசிகர்களைக் கொண்டிருந்தார் குஷ்பு. டாப் ஹீரோயினாக இருந்தபோதே நடிகை குஷ்பு திருமணம் செய்துகொண்டார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து, கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்த காதல் ஜோடிக்கு இரண்டு அழகான பெண் குழந்தைகள் உள்ளன. மூத்த பெண் பெயர் அவந்திகா, இளைய பெண் பெயர் அனந்திதா. நடிகை குஷ்பு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவரின் கொழுகொழு அழகு தான். குஷ்புவைப் போலவே அவரது மகள்களும் குண்டாக இருந்தனர். ஒருகட்டத்தில் மிகவும் குண்டாகி உருவகேலியை எதிர்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்ட பின், குஷ்புவின் மகள்கள், தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை சட்டென குறைத்து ஸ்லிம்மாக மாறினர்.
இதையும் படியுங்கள்... அடிக்கிற வெயிலுக்கு... பிகினியில் சில் பண்ணும் ரைசா-வின் ஹாட் கிளிக்ஸ்
நடிகை குஷ்புவும் அவரது மகள்களுக்கு இணையாக உடல் எடையை குறைத்து தற்போது இளமையாக காட்சியளிக்கிறார். நடிகை குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா, தற்போது லண்டனில் தங்கி படித்து வருகிறார். அவரின் சமீபத்திய புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து உள்ளன. லண்டன் வீதிகளில் குஷ்புவின் மகள் அவந்திகா நடத்தியுள்ள அந்த கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து பலரும் வாயடைத்துப் போய் உள்ளனர்.
இந்த வயசுல குஷ்பு கூட இம்புட்டு கவர்ச்சி காட்டியதில்லையே என சொல்லும் அளவுக்கு உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி மிரள வைத்துள்ளார் அவந்திகா. ஒருவேளை படித்து முடித்ததும் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுப்பதற்காக தான் அவந்திகா இவ்வாறு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறாரோ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவரின் இந்த கவர்ச்சி அவதாரம் கோலிவுட்டிலும் பேசுபொருளாக மாறி உள்ளது.
இதையும் படியுங்கள்... சான்ஸ் கிடைச்சா போதும் நடிகைகளுக்கு கிஸ் அடிச்சிடுவாரு... கமல் குறித்து பிரபலம் வெளியிட்ட ஷாக் தகவல்