லியோ-வில் லோகேஷ் கனகராஜ் சஸ்பென்ஸாக வச்சிருந்த விஷயம் லீக் ஆகிடுச்சு... நிஜமாவே இது வேறலெவல் மேட்டரா இருக்கே!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சஸ்பென்ஸான விஷயம் குறித்த தகவல் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் நடிகர் விஜய்யின் லியோவும் ஒன்று. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் மிஷ்கின், சாண்டி, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், பிக்பாஸ் ஜனனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தின் 60 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை அடுத்த மாதம் சென்னையில் நடத்த உள்ளனர். இன்னும் ஓரிரு மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்து படத்தை வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு உள்ளது. மறுபக்கம் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸும் படு ஜோராக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... மனைவியை விமர்சித்த கஸ்தூரிக்கு ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த தரமான ரிப்ளை - என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு!
லியோ படம் எல்.சி.யூவில் வருமா வராதா என்கிற கேள்வி ஒருபக்கம் இருக்க அதனை சஸ்பென்ஸாக வைத்துள்ள படக்குழு, மேலும் சிலவற்றை வெளியிடாமல் மிகவும் சீக்ரெட்டாக வைத்திருக்கிறதாம். அப்படி லோகேஷ் கனகராஜ் வைத்திருந்த ஒரு சீக்ரெட் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது. அதுவும் விக்ரம் படத்தில் அவர் சூர்யா கேரக்டரை எப்படி சீக்ரெட்டாக வைத்திருந்தாரோ அந்த அளவுக்கு ஒரு டாப் டக்கரான கேரக்டர் பற்றிய தகவல் தான்
அது என்னவென்றால், லியோ படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரம் சிங்கத்தின் குணாதிசயங்களைப் போல் ஒத்து இருக்குமாம். அதனை வெளிப்படுத்தும் விதமாக சிங்கம் தொடர்பான காட்சிகளும் படத்தில் முக்கிய பங்காற்றும் வகையில் தான் திரைக்கதை அமைத்துள்ளாராம் லோகி. அந்த சிங்கம் தொடர்பான காட்சிகளை CG மூலம் கொண்டு வருவதற்காக ரூ.15 கோடி வரை செலவழித்து இருக்கிறார்களாம். படத்தில் இது முக்கிய அங்கம் வகிக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... அச்சச்சோ அதுக்குள்ளயா... இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்ட ‘பொன்னியின் செல்வன் 2’ - படக்குழு அதிர்ச்சி