மனைவியை விமர்சித்த கஸ்தூரிக்கு ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த தரமான ரிப்ளை - என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு!

டுவிட்டரில் தனது மனைவியை விமர்சித்து பதிவிட்டிருந்த நடிகை கஸ்தூரிக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த தரமான ரிப்ளை கவனம் பெற்று வருகிறது.

AR Rahman reply to actress kasthuri for trolling her wife saira banu's tamil

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் தனது மனைவியுடன் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது ஏ.ஆர்.ரகுமான் மேடையில் விருது வாங்கியபோது, தொகுப்பாளர்கள், ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாயிரா பானுவையும் அழைத்து பேச சொன்னார்கள். அப்போது அவர் பேசத் தொடங்கும் முன் குறுக்கிட்ட ஏ.ஆர்.ரகுமான், தயவு செஞ்சு இந்தில பேசாதீங்க, தமிழ்ல பேசுங்க என கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து பேசத் தொடங்கிய சாயிரா பானு, தனக்கு தமிழ் சரளமாக பேச வராது என கூறிவிட்டு ஆங்கிலத்தில் பேசினார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆனது. இந்த வீடியோவை பார்த்த நடிகை கஸ்தூரி, ஏ.ஆர்.ரகுமானின் மனைவிக்கு தமிழ் பேச வராதா? அவரின் தாய் மொழி என்ன? வீட்டுல குடும்பத்தில் என்ன பேசுவாங்க? என பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இதையும் படியுங்கள்... அச்சச்சோ அதுக்குள்ளயா... இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்ட ‘பொன்னியின் செல்வன் 2’ - படக்குழு அதிர்ச்சி

கஸ்தூரியின் இந்த பதிவுக்கு, அவர் என்ன மொழி பேசினால் உங்களுக்கு என்ன? என நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துவந்த நிலையில், தன் மனைவியை விமர்சித்தால் தான் சும்மா விட மாட்டேன் என ஏ.ஆர்.ரகுமானும் தன் பங்கிற்கு களமிறங்கி தரமான ரிப்ளை ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி கஸ்தூரியின் பதிவைக் குறிப்பிட்டு, ‘காதலுக்கு மரியாதை’ என நச்சுனு ஒரே வார்த்தையில் ரிப்ளை கொடுத்துள்ளார். அது தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர்.ரகுமானின் இந்த ரிப்ளையை பார்த்த நெட்டிசன்கள் தக் லைஃப் தலைவா என கமெண்ட் செய்து வருகின்றனர். அதோடு நடிகை கஸ்தூரியையும் மறுபக்கம் வசைபாடி வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமானின் இந்த டுவிட்டை 1 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பார்த்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த டுவிட்டுக்கு 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக்குகளை அள்ளிக்குவித்து உள்ளனர். 

இதையும் படியுங்கள்... என்டிஆர் நூற்றாண்டு விழா: சூப்பர்ஸ்டார் ரஜினியை வரவேற்ற பாலகிருஷ்ணா..வைரல் வீடியோ!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios