முட்ட பாயும் காளை.. எகிறி ஓடும் சூர்யா.. ஏறுதழுவ பயிற்சி பெற்ற வீடியோவை வெளியிட்ட 'வாடிவாசல்' படக்குழு!
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக... 'வாடிவாசல்' படக்குழு தற்போது சூர்யா மாடு பிடிக்க பயிற்சிபெறும் வீடியோவை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் இதுவரை வெளியான அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது. தற்போது இவர் இயக்கத்தில் 'விடுதலை' திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்துள்ளார்.
மேலும் விஜய்சேதுபதி, மற்றும் கவுதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விரைவில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக சூர்யாவை வைத்து இயக்க உள்ள 'வாடிவாசல்' படத்தை இயக்கவும் தயாராகி உள்ளார் வெற்றிமாறன்.
மேலும் செய்திகள்: அருண்மொழி வர்மன் இராஜராஜன் ஆகிறான்..! 'பொன்னியின் செல்வன்' படக்குழு வெளியிட்ட சரித்திரம் சொல்லும் வீடியோ!
சூர்யா இதுவரை பல படங்களில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இதுவரை மாடுபிடி வீரராக நடித்தது இல்லை. தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள 'வாடிவாசல்' படத்தில் தகுந்த பயிற்சிகளோடு மாடுபிடி வீரராக தன்னை தயார் படுத்தி நடிக்கிறார் சூர்யா. இந்த படத்தின் பணிகள் ஏற்கனவே துவங்க பட்ட நிலையில், விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூர்யா இன்று தன்னுடைய 47 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகள்: 'கிரே மேன்' படத்தில் வந்தது 10 நிமிஷம் கூட இல்ல... ஹாலிவுட் நடிகரிடம் மோசமாக திட்டி வேற வாங்கிய தனுஷ்!
இதில் சூர்யா மாடுபிடி வீரர்களிடம் இருந்து ஏறுதழுவும் நுணுக்கங்களை கற்றுக்கொண்ட போது படம் பிடிக்கப்பட்ட காட்சிகள் என்றும், 'வாடிவாசல்' படத்தின் முன்னோட்டம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில்... சூர்யா 'வாடிவாசலில்' மாடு பிடிக்க தயார் ஆகும் காட்சிகளும், மாடு பிடி வீரர்களிடம் நுணுக்கங்களை கற்ற போது, காளை ஒன்று முட்ட வர... அவர் எகிறி ஓடும் காட்சியும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை தயாரிப்பாளர் தாணு தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு... "தேசிய விருது வென்ற திரு சூர்யா அவர்களின் பிறந்தநாள் அன்று, அவர் 'வாடிவாசல்' படத்திற்காக தன்னை தயார் படுத்திக்கொள்ள, மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்ட காட்சிகள் இன்று உங்களின் பார்வைக்கு என வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ...