சூர்யா தன்னுடைய 42 ஆவது படத்திற்காக, கடுமையான உடல் பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல் ஒவ்வொரு படத்திலும், தன்னுடைய வித்தியாசமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி, ரசிகர்களை வியக்க வைத்து வரும் சூர்யா... தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராண கதை ஒன்றில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக சூர்யா கடுமையான ஒர்க் அவுட் செய்யும் வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் செம்ம ட்ரெண்ட் ஆகியுள்ளது.
நடிகர் சூர்யா கமர்ஷியன் கதைக்களத்தை தாண்டி, சமூக அக்கறை கொண்ட படங்களில் நடிப்பதோடு தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்து நடித்த 'ஜெய்பீம்' மற்றும் 'சூரரை போற்று' ஆகிய படங்களுக்கு அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சூர்யா 'சூரரை போற்று' படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.
தகதவென ஜொலிக்கும் கருப்பு நிற டாப்பில்... இடையழகை காட்டி ரசிகர்களை சொக்க வைக்கும் நடிகை சினேகா!

மேலும் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் சுமாரான விமர்சனங்களை மட்டுமே பெற்ற நிலையில், தன்னுடைய அடுத்த படத்தை தரமாக கொடுக்க போராடி வருகிறார் சூர்யா. இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த 'வணங்கான்' படம் கைவிட பட்ட நிலையில், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் 'சூர்யா 42' படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த படத்தில் சூர்யா 5 அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் என ஐந்து வித்தியாசமான வேடங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 60 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையிலும், படம் குறித்த காட்சியோ... அல்லது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் வெளியாகிவிட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது படக்குழு. இந்நிலையில் சூர்யா இந்த படத்திற்காக எவ்வளவு தீவிரமாக உழைக்கிறார் என்பதை தெரிவிக்கும் விதமாக வெளியாகியுள்ளது சூர்யாவின் ஒர்க்கவுட் வீடியோ.
இந்த வீடியோவை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
