Actor Suriya Voice Note for Fans : சென்னை உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் பெய்த கன மழை மற்றும் நிக்ஜாம் புயலின் தாக்கத்தால் இன்றளவும் ஒரு சில இடங்களில் வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.

ஆகவே அரசோடு இணைந்து பல தன்னார்வலர்களும் வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி நிக்ஜாம் புயல் கரையை கடந்து விட்டது என்றாலும் கூட, சுமார் ஐந்து நாட்கள் ஆகியும் இன்னும் சென்னையின் சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. 

உணவு இன்றி பல நூறு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர், இந்நிலையில் இவர்களுக்கு உதவ மருத்துவ முகாம்களும், உணவு பொட்டலங்களும் மற்றும் அடிப்படை தேவைகளும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி நடிகர் கார்த்தி ஆகியோர் இணைந்து முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

தனது துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனையை நடத்திய இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்.. வைரலாகும் வீடியோ..!!

மேலும் தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களை தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்ததும் குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். 

இந்நிலையில் தனது ரசிகர்களின் உடல் நலம் குறித்து நடிகர் சூர்யா பேசும் காணொளி ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் "பசங்க தினமும் தண்ணீரில் நின்று தங்களது பணிகளை செய்து வருகின்றார்கள். ஆகவே அவர்கள் இரவு நேரத்தில் படுக்கும் பொழுது காலில் எண்ணெய் மற்றும் மஞ்சள் பொடியை போட்டுக் கொள்ளுமாறு அவர்களுக்கு கொஞ்சம் அறிவுறுத்துங்கள்". 

பாலக்காடு ஸ்ரீராம்.. இவரை பற்றி கேள்வி பட்டுருக்கீங்களா? தமிழில் இவர் பாடின எல்லாமே சூப்பர் ஹிட் சாங்ஸ் தான்!

Scroll to load tweet…

"இதை கட்டாயம் அனைவரையும் செய்யச் சொல்லுங்கள்", என்று கூறி தனது ரசிகர்களின் நலனின் அக்கறை கொண்டு உள்ளார் நடிகர் சூர்யா. நடிகர் சூர்யா தனது கங்குவா பட பணிகளை முடித்துள்ள நிலையில், அந்த படத்தின்போது ஏற்பட்ட காயத்தால் தற்போது ஓய்வெடுத்து வருகின்றார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.